Published : 19 Sep 2014 01:47 PM
Last Updated : 19 Sep 2014 01:47 PM
பாதித்த புத்தகம்:
ராபின் ஷர்மாவின் ‘தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி’ (The Monk who sold his Ferrari). வாழ்க்கையில் வரும் தடைக் கற்களைப் படிக் கற்களாக மாற்ற உதவும் தன்னம்பிக்கைப் புத்தகம். மனநிம்மதி, அன்பு, நேர்மைதான் வாழ்வதற்கு தேவையே தவிர பணமோ, செல்வமோ அல்ல என்பதை உணர்த்தும் புத்தகம்.
பிடித்த படம்:
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான், மாதவன், ஹர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்த ‘3 இடியட்ஸ்’ (3 Idiots). சேத்தன் பகத்தின் ‘ஃபைவ் பாயிண்ட் சம் ஒன்’ (Five point someone) எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட சினிமா. படிப்புக்கும், கற்றலுக்குமான வித்தியாசத்தை வெளிப்படையாகப் பேசிய, தேசிய விருது பெற்ற படம்.
பிடித்த இசை:
‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும், ஷங்கர் மகாதேவன், ஹரிஹரன், கார்த்திக், ஹரிணி, ஷ்ரேயா கோஷல் ஆகியோரின் குரல்களும்.
கனவுப் பயணம்:
டார்ஜிலிங், குலு மணாலி போன்ற குளிர்பிரதேசங்களின் இயற்கை அழகை ரசிக்க வேண்டும்.
ஹேங்க்அவுட் ஸ்பாட்:
சொந்த ஊரான கடலூரின் வெள்ளிக் கடற்கரையும், நான் படிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியும்.
ஆர். கிரிதரன், இரண்டாம் ஆண்டு, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், அண்ணா பல்கலைக்கழகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT