Published : 05 Sep 2014 12:04 PM
Last Updated : 05 Sep 2014 12:04 PM
எல்லாவற்றையும் டைம்தான் தீர்மானிக்கிறது. டைம் பார்க்க வீட்டில் விதவிதமான கடிகாரங்கள் உள்ளன. கையில் ரகம் ரகமான வாட்சுகளைக் கட்டி மகிழ்கிறோம். மொபைல் காலத்திலும் வாட்சு தனது மவுசை இழக்கவில்லை.
ஃபாஸ்டிராக், ரோலெக்ஸ், டைட்டன், சொனாட்டா, லோரில்ஸ், காசியோ, கியு அண்டு கியு, டைமெக்ஸ் போன்ற கம்பெனிகள் வாட்சு தயாரிப்பில் ஈடுபடுகின்றன. புதிய புதிய மாடல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. டிசைன், ஸ்டைல், மாடர்ன் போன்ற எல்லா வற்றிலும் டாப்பான பல வாட்சுகள் கிடைக்கின்றன. ஆன்லைனிலோ கடைகளிலோ கிடைக்கும் வாட்சுகளின் இப்போதைய டிரெண்ட்...
# ஃபாசில் (Fossil )
இது இப்போதைய முன்னணி டிரெண்டி மாடல் வாட்சு. ஆண்களுக்கும், பெண்களுக்குமான கைக்கடிகாரங்கள் தனித்தனியாக வசீகரமான வகையில் உள்ளன. இதன் விலை ரூ.5,500 முதல் ரூ12,500 வரை உள்ளது.
# காசியோ (Casio)
இதில் பலவகை மாடல்கள் உள்ளன. அனைத்திலும் மிக அதிகமான மாடல்களை காசியோ கம்பெனி வைத்திருக்கிறது. இதன் விலை ரூ.9,000 முதல் உள்ளது.
# டைட்டன் (Titan )
இதில் ஆண்கள் பெண்கள் எனத் தனித்தனி கைக்கடிகாரங்கள் மிக அம்சமாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. ஆண்களின் கைக்கடிகாரங்கள் ரூ.9,000 முதல் 16,000 வரையும் பெண்களின் கைக்கடிகாரங்கள் ரூ.15,000 முதல் உள்ளன. இவற்றில் குறைந்த விலை கை கடிகாரங்கள் ரூ.2,000 முதல் இருக்கின்றன. பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முத்து வைத்து அலங்கரித்த கைக்கடிகாரங்களும் தற்போது அதிகமாக விற்பனையாகி வருகிறது.
# ஃபாஸ்ட் டிராக் (Fast Track )
இதில் இப்போதைய புதிய மாடல் என்ன தெரியுமா? கைக்கடிகாரத்தின் ஸ்ட்ராப்கள் தனித்தனியே இருக்கும் அதனை நமக்கேற்ற முறையில் நிறத்தில் அதனை செட் செய்துகொள்ளளாம். இதற்கு DYI do it yourself என்று பெயர். இதன் விலை ரூ.1,400 முதல் ரூ.3,000 வரை.
# டைமெக்ஸ் (Timex )
இதில் மிக விஷேசமான ஒரு கைக்கடிகார மாடல் உள்ளது. இது வளையலைப்போல இருக்கும். இதன் விலை ரூ.4,000-ல் ஆரம்பிக்கிறது. ஆண்களுக்கான க்ரோணோகிராப்பி மாடல் கைக் கடிகாரங்களும் உள்ளன. இதன் விலை ரூ.5,500 முதல். சாதாரணமான கைக்கடிகாரங்கள் ரூ.2,500-ல் தொடங்குகின்றன.
# சிட்டிசென் (Citizen)
இதில் ப்ரோமாஸ்டர் என்ற மாடல் உள்ளது. இவை செயற்கைக்கோள் மூலம் சிக்னலை வாங்கும். ஆல்டிமீடர், காந்த திசைக்காட்டிக் கருவி, ஆடோமேடிக் டையம் போன்ற அம்சங்களும் இதில் உள்ளது. இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை.
# ராடோ (Rado)
இது ஆடம்பர கைக்கடிகாரங்கள் வகையில் வரும். இதில் பல லேட்டஸ்ட் டிசைன்கள் வந்துள்ளன. இதன் விலை ரூ.25,000. “இந்தக் கைக்கடிகாரங்கள் எலைட் மக்களுக்காகவே தயாராகிவரும் மாடல்கள். இதுதான் இப்போதைய டிரண்டு” என்று திரு.சம்பத் பி.ஓஆர்ஆர் அண்டு சன்ஸ் ஊழியர் கூறினார்.
# விக்டொரினாக்ஸ் (Victorinox )
இவையும் ஆடம்பரக் கைக்கடிகார மாடல்களே. இதன் விலை ரூ.25,000-ல் தொடங்குகிறது.
# எடிஃபைஸ் (Edifice )
இவை ஸ்போர்ட்ஸ் கைக்கடிகாரங்கள். இதன் விலை ரூ.5,000 முதல்.
# ஜி-ஷாக் (G-Shock)
இவையும் ஸ்போர்ட்ஸ் கைக்கடிகாரங்கள் தான். இதன் விலை ரூ.4,000 முதல் உள்ளது.
அனைவருக்கும் டிசைன் டிசைனான கைக்கடிகாரங்களை அணிய வேண்டும் என்ற ஆசை உண்டு. பல கைக்கடிகாரங்கள் நமது பட்ஜெட்டுக்குள் தான் இருக்கின்றன. அதனால் டிரண்டியான வாட்சுகள் அணிந்து கலக்குவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT