Last Updated : 19 Sep, 2014 01:06 PM

 

Published : 19 Sep 2014 01:06 PM
Last Updated : 19 Sep 2014 01:06 PM

கீரிப் புள்ளையா, முள்ளம் பன்றியா? - கலக்கல் ஸ்டைல்

மொஹாக் (mohawk) ஸ்டைல்.... இப்படிச் சொன்னால் யாருக்கும் தெரியாது. புரியாதவர்களுக்கு ஒரு படத்தைச் சொன்னால் பட்டென ஞாபகத்துக்கு வந்துவிடும். ‘ஜெய் ஹிந்த்’ படத்தில் செந்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வருவார்.

அதைப் பார்த்த நம்ம கவுண்டரு, “அது என்னடா தலையில கீரிப்புள்ள படுத்திருக்கு"ன்னு முடியை தடவி பார்த்து நக்கல் செய்வார்.

தலையின் இரண்டு பக்கமும் முடியை மழித்து எடுத்துவிட்டு முன்பக்கத்தில் இருந்து பின்பக்க மண்டை வரைக்கும் நடுவில் மட்டும் ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்வதற்கு பெயர்தான் மொஹாக் ஸ்டைல். ஆனா, ‘கீரிப்புள்ள தலையன்’ என்று சொன்னால்தான் எஃபெக்டே கிடைக்குது.

தோனி தல

போன வருஷம் நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் ‘தல’ தோனிகூட இந்த கீரிப்புள்ள தலை ஸ்டைல்ல வந்து ஆட்டம் காட்டிட்டு போனாரு. இப்போ அதுக்கென்னன்னு கேட்குறீங்களா? அந்த ஸ்டைல்தான் வெளிநாடுகளில் இப்போது யூத் ஐகான்.

முடி இருக்குறவங்க, இல்லாதவங்க இருக்குற முடியை வைச்சுக்கிட்டு இந்த தலையோடதான் அலையுறாங்க.

வழக்கம் போல இந்த ஸ்டைலும் புதுசா கண்டுபிடிக்கப்பட்டதில்லை. 1940-களில் அமெரிக்காவில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் இந்த ஹேர் ஸ்டைலுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

புது வேஷம்

சுமார் 60 ஆண்டுகள் கழித்து ஓல்டு பேஷனைத்தான் யூத் பேஷன் என்று சொல்லிக்கிட்டு வெளிநாட்டு இளைஞர்கள் முடியை இரண்டு பக்கமும் சுரண்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இடையில் சில ஆண்டுகள் மறந்திருந்த இந்தப் பழக்கம், இப்போது ஐரோப்பிய இளைஞர்களைச் சுண்டி இழுக்க ஆரம்பித்திருக்கிறது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், கால்பந்து வீரர்கள் நெய்மர், பெக்காம் போன்ற வி.ஐ.பிகளின் புண்ணியத்தால் ஐரோப்பிய யூத்கள் மத்தியில் இந்த ஹேர் ஸ்டைலுக்கு தனி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இளைஞர்கள்தான் என்றில்லை இளம்பெண்களையும்கூட இந்த ஹேர் ஸ்டைல் மோகம் பிடித்து ஆட்டுகிறது.

முள்ளம்பன்றி

மொஹாக் ஸ்டைலை (mohawk) இன்னும் மெருகேற்றுகிறோம் என்ற பெயரில் அதை முள்ளம்பன்றி போலவும், புறாக்கூடு போலவும் மாற்றிக்கொண்டு அலையும் இளைஞர்களும் வெளிநாடுகளில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். விட்டால், இன்னும் என்னென்னத்தை எல்லாம் தலையில் வைத்துக்கொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை.

ஆனா, நம்ம கிரிக்கெட் கேப்டன் தோனி கீரிப்புள்ள தலையோட வந்த பிறகும்கூட, நம்மூரில் அதன் மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஏன் நம்ம இளைஞர்கள், திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க? கீரிப்புள்ள ஹேர் ஸ்டைலுக்கு ‘மொஹாக்’ன்னு ஸ்டைலான பேரு இருக்கிறது தெரியாதோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x