Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

மேகம் எல்லாம் எங்கே போச்சு?

“சில வெறித்தனமான அனிருத் பாடல்களைக் கேட்ட பின்பு எழுந்த சில வெறித்தனமான அனிருத் ஜோக்குகள்” – சிறில் அலெக்ஸ்

# அனிருத்துக்குத் தொண்டை கட்டவே கட்டாது. ஏன்னா அவர் மனசுலேந்து பாடுறாரு (மாத்தி யோசி)

# அனிருத்துக்கு குயில்போல பாட முடியும். ஆனா அவருக்கு காப்பி அடிக்கிறது பிடிக்காது.

# அனிருத் காந்திய சந்திக்கப் போனார் அப்போ அவர் மேசையில ஒரே ஒரு குரங்கு பொம்மைதான் இருந்துச்சு.

# அனிருத் ஒரு படத்துல நடிக்கிறார் அந்தப் படத்துக்குப் பெயர் ‘வாயை மூடிப் பாடவும்’

# அதுக்கடுத்து ஒரு படம் நடிக்கிறார், அந்தப் படத்துக்குப் பெயர் ‘காதை மூடி கேட்கவும்’

# பீத்தோவனுக்குப் பிடிச்ச ஒரே இசையமைப்பாளர் அனிருத்துதான். ஏன்னா அனிருத் பாடுறத மட்டும்தான் பீத்தோவனால கேட்க முடியுமாம்.

# அனிருத் சொர்க்கத்துக்குப் போனாராம். அங்க ஏதோ மிஸ்ஸிங்கா இருந்துச்சாம். ‘இங்க பஞ்சு பஞ்சா மேகமெல்லாம் இருக்குமே எங்க?’ என்று கேட்டாராம் ‘அதையெல்லாம் எடுத்து காதுல வச்சிருக்கோம்’ என்று பதில் வந்துச்சாம்.

ராபிட் பயர் ரவுண்ட்

# அனிருத்தால மைக் இல்லாமலேயே ரெக்கார்ட் பண்ண முடியும்

# அனிருத் சாமி பாட்டு பாடினா பெரியாருக்கே பக்தி வரும்

# அனிருத்தால ஏழு ஸ்வரத்திலேயும் கத்த முடியும்.

# அனிருத்துக்கு மியூசிக் சொல்லித் தந்தவருக்குக் கையெழுத்து சரியா வராது

# அனிருத் ஜன கன மன பாடினா பாகிஸ்தான் மக்களுக்குத் தேசபக்தி வரும்

# அனிருத்தினுடைய பாடி லேங்வேஜுக்கே உச்சரிப்பு உண்டு.

# அனிருத்தோட குடும்ப பாடல் சா...ரீ...கா...மா...பா...தா..நீ...

# அனிருத் பாடாத பாடல்களுக்குத்தான் அதிக விருது வாங்கியிருக்கார்.

(mostly humanitarian)

(பி.கு: நான் ஒரு சீக்ரட் அனிருத் ரசிகன்)

>https://www.facebook.com/cyril.alex?hc_location=timeline

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x