Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM
ஒரு வருஷம் கழித்து நம் சொந்த ஊருக்குத் திரும்பினாலே, அந்தப் பகுதியின் அடையாளச் சின்னமாக இருந்த மரமோ, கட்டிடமோ, சாலையின் ஒரு பகுதியோ காணாமல் போய், வெறிச்சென்று இருக்கும். வழி தெரியாமல் முழிப்போம்.
ஆனால், இன்றைக்குப் பெருநகராக மாறிவிட்ட சென்னை போன்ற ஊரில் கால் பதிக்கும்போது, இப்படி ஆச்சரியம் ஏற்படுத்தும் தருணங் களை நிச்சயம் எண்ண முடியாது.
சென்னை இப்படியெல்லாம் இருந்திருக்குமா என்று யோசிக்க வைக்கும் வகையில் பல கறுப்பு வெள்ளை படங்கள் வந்துவிட்டன. ஆனால், சென்னையைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான த. முருகவேளிடம் இருக்கும் படங்கள், நமது ஆச்சரியத்தை மேலும் அதிகரிக்கின்றன.
காட்டுயிர், இயற்கை சார்ந்த அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கைக் கொண்ட இவர், அதற்காகத் தென்னிந்திய அளவில் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இங்கே இடம்பெற்றுள்ள படங்களை அஞ்சல் தலை சேகரிக்கும்போது, சேர்த்துச் சேகரித்திருக்கிறார்.
"நாம் வாழும் ஊரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால்தான் பிக்சர் போஸ்ட்கார்டுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் ஒரு ஊருக்குச் சுற்றுலா செல்லும்போது, அந்த ஊரின் முக்கியப் பகுதிகள், காட்சிகள், பழக்கவழக்கங்களைச் சொல்லும் கவர்ச்சிகரமான வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்புவது வழக்கம்.
வண்ண அச்சிடும் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், கறுப்பு வெள்ளைப் படத்தின் மேலேயே வண்ணம் சேர்க்கப்பட்டதும் உண்டு. இந்தப் பிக்சர் போஸ்ட்கார்டுகளில், அஞ்சல் செய்யப்பட்டவை மிகவும் அரிது. இந்த இரண்டு வகைகளும் என்னிடம் இருக்கின்றன" என்கிறார் முருகவேள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT