Last Updated : 14 Feb, 2025 10:27 AM

 

Published : 14 Feb 2025 10:27 AM
Last Updated : 14 Feb 2025 10:27 AM

காதலுக்குப் பொய் அழகு? | காதலர் தினம் ஸ்பெஷல்

காதலர்களும் காதலிக்க விரும்புபவர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ‘காதலர் தினம்’ வந்துவிட்டது. காதல் என்றாலே பரஸ்பரமாக அன்பைப் பரிமாறிக் கொள்வதுதானே! ஆனால், காதலில் பொய்யும் ஓர் அங்கம்தான். அதனால், பாய் பிரெண்ட் மட்டுமே பொய் சொல்வார் என்று நினைப்பது தவறு. கேர்ள் பிரெண்ட்களும் நிறைய பொய் சொல்வார்கள்.

இதில் பால் பேதம் எல்லாம் கிடையாது. சொல்லும் பொய்கள்தான் வித்தியாசப்படும். இதில் கேர்ள் பிரெண்டுகள் சொல்லும் பொய்களுக்குப் பின்னணியில் உண்மையான அர்த்தமும் இருக்கும். அதைச் சில கோடு வேர்டு மூலம் உணர்த்துவார்கள். அதுபோன்ற பொய்கள் என்னென்ன?

பொய்: எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அர்த்தம்: கேர்ள் பிரெண்ட் இப்படிச் சொன்னால் உஷாராகிவிட வேண்டும். உதாரணமாக, பாய் பிரெண்ட் நண்பர்களுடன் வெளியே செல்ல உத்தேசித்திருப்பதைச் சொன்னால், அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிற பதில் வந்து விழும்.

ஆனால், ‘என்னைவிட உன் நண்பர்கள்தான் உனக்கு முக்கியமா’ என்று அடுத்த சில நாள்களிலேயே குத்திக் காட்டிவிடுவார்கள். இந்தப் பொய்யை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவுக்குச் சாமர்த்தியம் உங்களுக்குத் தேவை. அந்தச்சாமர்த்தியம் உங்களுக்கு இல்லை என்றால் கஷ்டம்தான்.

பொய்: சத்தியமா, கோபப்பட மாட்டேன்.

அர்த்தம்: பாய் பிரெண்டிட மிருந்து உண்மையை வரவழைக்க விரும்பினால், இந்தப் பொய்யைச் சொன்னால் போதும். உண்மையில், அவர் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் உண்மையைச் சொன்னாலும் பிரச்சினைதான். பொய் சொன்னாலும் பிரச்சினைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், கோபத்தைச் சமாளிப்பதைப் பற்றி மட்டும் நீங்கள் யோசித்தால் போதும்.

பொய்: உன் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை.

அர்த்தம்: ஒரு வேளை உங்கள் கேர்ள் பிரெண்ட் இப்படிச் சொன்னால், உங்களுடைய சோஷியல் மீடியா ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை’ ‘சிங்கிள்’ என இருப்பதிலிருந்து ‘கமிட்டட்’ என மாற்ற வேண்டியது அவசியம் எனப் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்டேட்டஸ் மாறாவிட்டால், உங்கள் ரிலேஷேன்ஷிப்கூடக் கேள்விக்கு உள்ளாகலாம்.

பொய்: உன் சம்பளத்தைப் பற்றி அக்கறையில்லை.

அர்த்தம்: இது சத்தியமாகப் பொய்தான். பெயருக்குத்தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையில்லை. உங்கள் கேர்ள் பிரெண்டுக்கு அடிக்கடி பரிசு கொடுக்க நீங்கள் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும். அதை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் பரிசு கொடுக்காவிட்டால், உங்களுக்கு அவர்கள் மீது அன்பு இல்லை என்று உங்கள் கேர்ள் பிரெண்ட் நினைக்க சாத்தியம் அதிகம்.

பொய்: நான் உன்னை மன்னித்து விடுகிறேன்.

அர்த்தம்: உங்கள் கேர்ள் பிரெண்ட் இப்படிச் சொல்லும்போது, அதை நம்பினால் நீங்கள் ஏமாளிதான். அவர் மன்னித்துவிட்டதாகச் சொன்ன விஷயம், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எரிமலையாக வெடிக்கலாம். இதை நீங்கள் ஊகிக்காவிட்டால், உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

பொய்: உன் நண்பர்கள் வந்தால் பிரச்சினை இல்லைப்பா.

அர்த்தம்: பாய் பிரெண்ட் தன் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதை எந்த கேர்ள் பிரெண்டும் விரும்பவே மாட்டார். எனவே, அவருடன் இருக்கும் போது, உங்கள் நண்பர்கள் உடன் வந்தால் பிரச்சினை உங்களுக்குத்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x