Last Updated : 27 Dec, 2024 06:06 AM

 

Published : 27 Dec 2024 06:06 AM
Last Updated : 27 Dec 2024 06:06 AM

மைதானத்தை அதிர வைத்தவர்கள் @ 2024

2024 இல் விளையாட்டில் சாதித்துக் காட்டிய சில வீரர்கள்.

* பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கையோடு சீனாவில் நடைபெற்ற ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பையையும் இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்தார், இந்திய ஆடவர் அணியின் கேப்டன், 28 வயதான ஹர்மன்பிரீத் சிங். இவருடைய தலைமையில் ஹாக்கி அணி மெருகேறி வருகிறது.

* பாராலிம்பிக் இந்திய வரலாற்றில் 2016, 2020 பாராலிம்பிக்கைத் தொடர்ந்து 2024லும் வெண்கலப் பதக்கம் வென்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார், சேலம் பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்த 29 வயதான மாரியப்பன். மேலும் முதல் முறையாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்று சாதித்தார்.

* மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முக்கியக் காரணமாக அமைந்தார். இத்தொடரில் மொத்தமாக பும்ரா 178 பந்துகளை வீசியதில் 110 டாட் பந்துகளாக அமைந்தன. 124 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர் நாயகன் விருதை வென்றார்.

* கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கால்பந்தில் கோலோச்சிய இந்திய வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெற்றார். 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான ஆசியத் தகுதிச் சுற்றுப் போட்டியோடு அவர் விடைபெற்றார். சர்வதேச அளவில் 151 போட்டிகளில் 94 கோல்களை அடித்த மூன்றாவது வீரர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.

* சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரெனை 7.5-6.5 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்று வரலாறு படைத்தார், சென்னையைச் சேர்ந்த டி.குகேஷ். ஆனந்துக்குப் பிறகு கிளாசிக்கல் செஸ் உலகப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய வீரர் இவர். 22 வயதில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த ரஷ்யாவின் கேரி காஸ்பரோவின் சாதனையையும் 18 வயதில் வென்றதன் மூலம் குகேஷ் முறியடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x