Published : 01 Aug 2014 03:04 PM
Last Updated : 01 Aug 2014 03:04 PM

கியூட் கால்களுக்கு டிரெண்டி காலணிகள்

ஒரு பெண் தனது அழகை எந்த விதத்தில் பராமரிக்கிறாள் என்பதை அவர் போட்டுக்கொள்ளும் நெயில் பாலிஷையும், காலணியையும் பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். சிலர் அதிலெல்லாம் அதிகம் ஆர்வம் காட்டமாட்டார்கள், அது ஒன்றும் குற்றமல்ல.

ஆனால் 90 சதவீதப் பெண்கள் அவர்களது கால்களை அழகாக வைத்துக்கொள்ளப் பல வித்தியாசமான முறைகளைக் கையாளுகிறார்கள். அதில் ஒன்றுதான் டிரெண்டி காலணிகள்.

எலைட், நடுத்தர மக்களுக்காகவே பல வகையான டிசைன்களில் காலணிகளை ஷூ மேக்கர்ஸ் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதனை ‘டிரெண்டி பட்ஜெட் காலணிகள்’ எனலாம்.

Softouch என்று அழைக்கப்படும் காலணிகள்

இதை அணிந்தால் குதிகாலில் வெடிப்போ, வலியோ ஏற்படாது. இந்தக் காலணிகள் பாதத்தை இதமாக வைத்திருக்கும். இது மென்மையானது. அதிகமாக நடை பயிலும் பெண்கள் இதை அணிவதால் பாதத்திற்கு நன்மை கிடைக்கும்.

# விலை ரூ.750-ரூ.1350 வரை

Cleo காலணிகள்

இது இப்போதுள்ள டிரெண்டி காலணிகளில் ஒன்று. இதை ‘கிலியோ’ என்று அழைப்பார்கள். வாகனங்களை ஓட்டும் பெண்கள் இதை அணிந்தால், கால்களுக்கு உறுதி கிடைக்கும்.

# விலை ரூ.1050 முதல்.

Titanic காலணிகள்

பெயரே வசீகரமாக இருக் கிறதே. இதை அலுவலகம், மிக முக்கியமான இடங்களுக்கு அணிந்துசெல்லலாம். இது ஃபார்மல் கலந்துரையாடல்களுக்கும் அருமையாகப் பொருந்தும்.

# விலை ரூ.470-ரூ.600 வரை.

Flats காலணிகள்

இவை எப்போதுமே டிரெண்டில் இருப்பவை. ‘Flats’ மிகவும் மென்மையாக இருக்கும். காலுக்கும் உடலுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவை இவை. அதிகம் நடப்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் அனைவருமே இதை அணியலாம்.

# விலை ரூ.400 முதல் ரூ.700

Covered shoes

கிட்டத்தட்ட மகாராஜாவின் காலணிகளைப் போலவே தோற்றமளிக்கும் இந்தக் காலணிகள் காலின் முழுப் பகுதியை மூடியிருப்பதால் இதற்கு ‘Covered Shoes’ என்று பெயர். இது காலுக்கு மிக மென்மையாக இருக்கும். காலை பத்திரமாகவும் பாதுகாக்கும்.

# விலை ரூ.700 முதல்

உலகின் மிக அழகான காலணி வகைகள்

பல விதமான காலணிகள் உலகம் முழுவதும் இருக்கின்றன, இவைதான் இன்றைய ஃபாஷன் உலகத்தை ஆளுகின்றன என்று கூறுகிறார் ஆலாக் அகமத் (Ahalaq Ahamed)- ஃபாஷன் டிசைனர். அவற்றுள் சில:

கிளாடியேட்டர் காலணிகள் (Gladiator Shoes):

இவை ரோமின் கொலோசியத்திலிருந்து நேரடியாக வருகின்றன. மாடர்ன் ஆடைகளுடன் இவற்றை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

காப்-டோ ஹீல்ஸ் (Cap-Toe Heels)

இவை பெண்களுக்குப் பிரம்மாண்டமான தோற்றத்தை அளிக்கும்.

ஆங்கிள் பூட்ஸ் (Ankle Boots):

இவை ஆண்களின் காலணிகளை உதாரணமாக வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டவை. அலுவலகங்களுக்கு அணிந்து செல்ல உகந்தவை.

பம்ப்ஸ் (Pumps):

இதை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருமே அணிந்துகொள்ளலாம். இவை எப்போதுமே அனைவருக்கும் பிடித்தமான காலணி மாடல்.

பெண்கள் தவிர்க்க வேண்டியவை

# காலணிகளுடன் சாக்ஸ் அணிவது

#ஃபிலிப் ஃபிலொப்பைக் கோடைக் காலத்தில் மட்டும் அணியலாம்.

#எம்பெலிஷ்மெண்ட்ஸ் (அலங்கார வேலைப்பாடுகள்) பொருத்தப்பட்ட காலணிகள்

உடலுக்கு நன்மை தரும் காலணிகள்:

#காற்று புகும் வழி இருக்கும் தோல் வகை

#எடை குறைவாக இருக்கும் வகை

#பாதங்களின் அடிப்பகுதி மிகவும் நெகிழ்வாக இருக்கும் மாடல்

காலணிகளை வாங்கும்போது, இது நமக்குப் பொருத்தமானதா என்றும், இதனை அணிந்தால் கால்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆலாக் அகமத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x