Published : 15 Aug 2014 02:19 PM
Last Updated : 15 Aug 2014 02:19 PM

ஸ்நேகா’ஸ் 5

# பாதித்த புத்தகம்

டக் எவர்லாஸ்டிங்

(Tuck Everlasting).

வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை இந்தப் புத்தகம் அழுத்தமாக விளக்கியிருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் தவறாமல் அனுபவிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் புத்தகம்.

# பிடித்த படம்

கன்னத்தில் முத்தமிட்டால்.

ஒரு முக்கியமான சர்வதேசப் பிரச்சினையை உணர்வுபூர்வமாக அணுகியிருந்த படம். எத்தனை முறை பார்த்தாலும் ஒரே விதமான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தும் படம்.

# இசை ஆல்பம்

ஜே ஸீனின் ஆல் ஆர் நத்திங் (All or Nothing) ஆல்பம்.

எந்த மனநிலையில் இந்த ஆல்பத்தைக் கேட்டாலும் ஒருவித நல்லுணர்வை ஏற்படுத்திவிடும்.

# கனவு பயணம்

ஐரோப்பா. எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்து அவர்களது கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது என் கனவு.

# ஹேங்க் அவுட் ஸ்பாட்

கங்கோத்ரி. அங்கே நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து ‘சாட்’ சாப்பிடுவதன் ருசியே தனி.



ஸ்நேகா கணேசன், நான்காம் ஆண்டு,
எம்.எஸ்சி. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x