Published : 11 May 2018 10:37 AM
Last Updated : 11 May 2018 10:37 AM
ம
கிழ்ச்சியான காதல் உறவு என்பதில் நம்மில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், மகிழ்ச்சியான காதல் உறவு என்ற ஒன்று இருப்பதாக நம்பும் சிலர், அது எப்படி இருக்கும் என்ற அளவுகோல்கள் தெரியாமல் அல்லல்படுகின்றனர்.
நாம் காதல் உறவைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் சமூகம் காதல் பற்றி இவ்வளவு காலமாகப் பேசிவந்திருக்கும் கற்பிதங்களில் இருந்து வெளியே வர வேண்டும். உண்மையில், மகிழ்ச்சியான காதல் உறவை எப்படித் தீர்மானிப்பது?
இந்தப் புத்தாயிர உலகத்தில் மகிழ்ச்சியான காதல் உறவைத் தீர்மானிக்கும் காரணிகளாக உலகின் பிரபல மனோதத்துவ நிபுணர்கள் இவற்றைத் தெரிவித்திருக்கிறார்கள்:
எரிக் ஃப்ரோம், சமூக உளவியலாளர், ஜெர்மனி
காதல் என்பது இயற்கையான விஷயமல்ல. ஒழுக்கம், கவனம், பொறுமை, நம்பிக்கை, தற்காதலிலிருந்து மீள்வது போன்ற தனித்துவமான தேவைகள் அதற்கு இருக்கின்றன. அது ஓர் உணர்வு மட்டுமல்ல, அது ஒரு பயிற்சி.
மகிழ்ச்சியான காதல் தம்பதிகள், எப்போதும் தங்கள் துணையைச் சிறந்த தோழனாகவோ தோழியாகவோ பார்க்கின்றனர். அவர்கள் தங்களிடையே பரஸ்பரம் ஆரோக்கியமான உரையாடலைப் பேணுகின்றனர். அவர்கள் பரஸ்பரம் இருவருடைய கருத்துகளுக்கும் மதிப்பளிக்கின்றனர்.
அவர்கள் கருத்து வேறுபாடுகளைச் சாதாரணமாகவும், தங்கள் உறவு எதிர்கொள்ளும் ஆரோக்கியமான சவாலாகவும் பார்க்கின்றனர். அந்த வேறுபாடுகளை இருவரும் சேர்ந்து சீர்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர். அன்பான, மகிழ்ச்சியான காதல் தம்பதிகள் ஒருவருக்கொருவர் எப்போதும் ஆதரவாக இருக்கின்றனர். பரஸ்பரம் தங்களது வெற்றிகளைக் கொண்டாடுகின்றனர். தங்கள் துணைக்குப் போதுமான நேரத்தை ஒதுக்குகின்றனர்.
சோன்யா லியுபோமிர்ஸ்கி, மனோதத்துவப் பேராசிரியர், மகிழ்ச்சி குறித்த ஆராய்ச்சியாளர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம்
அதற்கு மாறாக, தங்கள் வாழ்க்கைத் துணை தங்கள் நற்செய்திகளுக்கு எப்படி எதிர்வினை புரிகிறார் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. இது உறவின் ஆச்சரியமான அம்சம்தான்.
ஸ்டெஃபானி சர்கிஸ், வளர்இளம் பருவத்தினருக்கான ஆலோசகர், அமெரிக்கா
ஒரு மகிழ்ச்சியான காதல் தம்பதிகளை ஏழு அம்சங்கள் தீர்மானிக்கின்றன. பரஸ்பர மரியாதை, விவாதம் செய்வது, சண்டையிடாமல் இருப்பது, பாலியல் உறவில் சமத்துவமான ஒப்பந்தம், குழந்தை வளர்ப்பில் சமமான பொறுப்புகள், நிதிப் பங்களிப்பில் சமத்துவம், பொதுவான லட்சியங்கள், விழுமியங்கள், விருப்பங்கள் ஆகியவை மகிழ்ச்சியான உறவைத் தீர்மானிக்கின்றன.
நம் அனைவரிடமும் அடிப்படையானதும் முரண்பாடனதும் என இரண்டு விதமான தேவைகள் இருக்கின்றன. பாதுகாப்பான காதலுக்கான தேவை, சாகசம் செய்வதற்கான தேவை என்று அவற்றைப் பிரிக்கலாம்.
இந்த இரண்டு தேவைகளையும் இணைப்பதும் காதலுக்கும் ஆசைக்கும் இடையில் இருக்கும் இனிமையான புள்ளியைக் கண்டு பிடிப்பதிலும்தான் மகிழ்ச்சி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT