Published : 30 Aug 2014 02:27 PM
Last Updated : 30 Aug 2014 02:27 PM

எங்கள் சாய்ஸ்: நிஷிதா’ஸ் 5

#பாதித்த புத்தகம்

தி ஹங்கர் கேம்ஸ் டிரையாலஜி, சூசன் காலின்ஸ் (The Hunger Games Trilogy by Suzanne Collins). இந்தப் புத்தகம் வருங்காலத்தில் முதலாளித்துவத்தால் நடக்கவிருக்கும் அழிவைப் பற்றி ஆழமாக விளக்கியிருக்கும். மனித சமுதாயத்தில் அனைவரும் எப்படி அடிமைகளாக்கப்படுகிறார்கள், சாகும்வரை போராடுவதற்கு எப்படித் தள்ளப்படுகிறார்கள் என்பதையெல்லாம் திகிலுடன் விளக்கியிருக்கும். இந்நாவலின் கதாநாயகி கேட்னிஸ் உயிர் வாழ்வதற்காகவும், அவள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் போராடுவது எனக்குள் ஒருவித உறுதியை ஏற்படுத்தியது.

#பிடித்த படம்

பே இட் ஃபார்வர்ட் (Pay It Forward). இது ஒரு மகத்தான படம். தான் வாழும் சமூகத்தை இன்னும் சிறந்ததாக மாற்ற நினைக்கும் ஒரு சிறுவனைப் பற்றிய கதை இது. அந்தச் சிறுவன் கடைசியில் இறந்துவிட்டாலும், அவன் ஆரம்பித்த இயக்கம் உலகம் முழுவதும் தீவிரமாகச் செயல்படும். சிறந்த நோக்கத்துக்காகச் செயல்படுகிறோமா, மோசமான நோக்கத்துக்காகச் செயல்படுகிறோமா என்பதை ஒரு தனிநபர்தான் தீர்மானிக்கிறார் என்று இந்தப் படம் எனக்கு உணர்த்தியது. எல்லோரும் இந்த உலகத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை இந்தப் படம் மூலம்தான் நம்பினேன்.

#ஹேங்க் அவுட் ஸ்பாட்

மெக் டோனால்ட்ஸ். எங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் மெக் டோனால்ட்ஸில்தான் நண்பர்களுடனான என் ஃபன் டைம் பெரும்பாலும் கழியும்.

#இசை ஆல்பம்

மரூன் 5யின் ஓவர் எக்ஸ்போஸ்டு (Overexposed by Maroon 5) ஆல்பம்.

#கனவுப் பயணம்

பாரீஸ். இந்த நகரத்தில் இல்லாத ஒரு விஷயமே கிடையாது. கட்டிடக் கலை, அருங்காட்சியகங்கள், சமையல் என அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆர். நிஷிதா, பன்னிரண்டாம் வகுப்பு, சி.எஸ்.ஐ. பெயின்ஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை.

‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x