Published : 08 Aug 2014 03:56 PM
Last Updated : 08 Aug 2014 03:56 PM

அஜந்த்’ஸ் 5 - எங்கள் சாய்ஸ்

அஜந்த்,

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி,

கோயம்புத்தூர்.

‘இளஞ்சோலை’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள்.

பிடித்த பாதித்த புத்தகம்

சிவா ட்ரையாலஜி (Shiva triology series- Amish Tripathi):

மெலுஹா என்ற நிலத்தை அடிப்படையாகக் கொண்டு திபெத்திய ட்ரைபல் சிவாவிடமிருந்து இந்தக் கதை ஆரம்பமாகிறது. இதில் நம் கலாச்சாரத்தையும் கடவுளையும் பற்றி இன்றைய சமுதாயத்திற்கு மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களைப் படித்து முடித்தாலும் இதன் தாக்கம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை. ஒரு லாங் லாஸ்டிங் இம்பேக்ட்டை உருவாக்கிறது.

பிடித்த படம்

ஐ அம் லெஜன்ட் (I am legend): வில் ஸ்மித் நடித்துள்ள இந்தப் படத்தை அவரின் நடிப்புத் திறமைக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஜோம்பிஸ் வாழும் ஊரில் இருந்து வெளிவருவதுதான் இதன் கதை. இதில் எனக்குப் பிடித்த இரண்டு விஷயங்கள் அந்த ஊரில் தனியாக இருக்கும் வில் ஸ்மித்தின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான்.

பிடித்த இசை ஆல்பம்:

ஷகிரா (Shakira) அதிலும் முக்கியமாக உலகக் கால்பந்து போட்டிகளுக்கு அவர் கொடுத்த பாடல்கள். (waka waka , la la la)

ஹேங் அவுட் ஸ்பாட்

ரிபப்ளிக் மால், தி பர்கர் ஷாப் (கோயம்பத்தூர்):

என்னதான் சாப்பிட்டாலும் நம்ம பர்கர் ஷாப்ல நண்பர்களோட அரட்டையும் அலம்பலுமா சாப்பிடறதுலதான் சந்தோஷமும் கூடவே வருது. ரிபப்ளிக் மாலுக்கு விளையாடுவதற்காகவே போவோம். மாலின் ஸ்பெஷல் கேம்: பவுலிங்

கனவுப் பயணம்

மான்செஸ்டர் (Manchester,UK):

எனக்குக் கால்பந்து மேல் உள்ள அளவற்ற ஆர்வம்தான் என்னை மான்செஸ்டருக்கு அழைக்கிறது. அங்கு உள்ள ஃபுட்பால் கிளப்புக்குச் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x