Last Updated : 20 Apr, 2018 09:59 AM

 

Published : 20 Apr 2018 09:59 AM
Last Updated : 20 Apr 2018 09:59 AM

கண்டபடி கண்டுபிடி - 1: பச்சைய பார்த்தா நில்லு!

1. ‘XL’ – ஐ விடவும் ‘L’ பெரியது. எப்படி?

2. 101 – 102 = 1 என்பது தவறான சமன்பாடு. இங்கு இருக்கும் ஒரு எண்ணை இடம் மாற்றினால், இதைச் சரியானதாக மாற்ற முடியும். கொஞ்சம் மாற்றித்தான் பாருங்களேன்!

3. 30 அடி உயரம் கொண்ட சுவரின் தரைப் பகுதியில் ஒரு நத்தை நின்றுகொண்டிருக்கிறது. ஊர்ந்தபடி அந்தச் சுவர் மீது ஏறத் தொடங்குகிறது. 3 அடி ஏறினால் 2 அடி சறுக்கிவிடுகிறது. எத்தனை மணி நேரத்தில் அந்தச் சுவரின் கூரையை நத்தையால் தொட முடியும்?

4. 1 3 5

2 4 ?

5. அதற்கு 13 இதயங்கள். ஆனால், வேறெந்த உறுப்புகளும் கிடையாது. அது என்ன?

6. சிவப்பு இருக்கும்வரை நகர்வோம். பச்சை வந்ததும் நின்றுவிடுவோம். எங்கே?

7. அந்தச் சுவரைக் கட்டி முடிக்க 12 ஆண்களுக்கு 18 மணி நேரம் பிடித்தது. அப்படியானால் அதே சுவரைக் கட்ட 9 பெண்களுக்கு எத்தனை மணி நேரம் தேவைப்படும்?

8. 1948-ல் பிறந்த தாத்தா சமீபத்தில்தான் தன்னுடைய 17-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். எப்படி?

9. 5-க்கும் 9-க்கும் இடையில் எந்தக் கணிதக் குறியீட்டை பொருத்தினால் 5-ஐ விடவும் பெரிய எண்ணும், 9-ஐ விடவும் சிறிய எண்ணும் கிடைக்கும்?

10. கீழே உள்ள படத்தில் என்னமோ தப்பா இருக்கே?

விடைகள்

1. ரோமன் எண்களில் L = 50, XL = 40

2. 101- 102 = 1 ரைட்டா!

3. 30 மணி நேரம் என்று நீங்கள் கணக்குப்போட்டால் அது தவறு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு அடிதான் அந்த நத்தையால் ஏற முடியும் என்பதே சரி. இப்படியாக 27 மணி நேரத்தில் 27 அடி ஏறியிருக்கும். அதன்பிறகு 28-வது மணி நேரத்தில் மூன்றடிகள் ஏறி கூரையைத் தொட்டுவிடுமே! பதில்: 28 மணிநேரம்

4. கார் கியர் படம் வைக்க வேண்டும்

5. சீட்டுக்கட்டு

6. தர்பூசணி பழத்தைச் சாப்பிடும்போது

7. நேரமே வேண்டாம் பாஸ்! அதுதான் ஏற்கெனவே அந்த சுவரைக் கட்டிமுடிச்சாசே.

8. 29 பிப்ரவரியில் பிறந்ததால் லீப் வருடம் அடிப்படையில் நான்காண்டுகளுக்கு ஒரு முறைதான் அவர் பிறந்த நாள் கொண்டாடியிருப்பார்.

9. . (புள்ளி) = 5.9 என்பது 5-ஐ விடவும் பெரியது, 9-ஐக் காட்டிலும் சிறியதுதானே!

10.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x