Published : 18 Jul 2014 03:16 PM
Last Updated : 18 Jul 2014 03:16 PM
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி (டபிள்யு.சி.சி.) நூறாவது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. ஜூலை 7-ந் தேதி நடந்த கொண்டாட்டங்கள் ஆண்டு முழுவதும் தொடர்வதற்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடந்துகொண்டிருக்கின்றன. “இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதே மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. பழைய மாணவிகள், ஆசிரியர்கள் என டபிள்யு.சி.சி.யின் அங்கமாக இருந்த ஒவ்வொருவரும் இந்த வரலாற்று நிகழ்வில் பெருமையுடன் கலந்துகொண்டனர். கொண்டாட்டங்களின் மற்றொரு சிறப்பம்சம் என்ன வென்றால் உலகம் முழுவதும் டபிள்யு.சி.சி. மாணவிகள் இருக்கும் நாடுகளுக்கு நூற்றாண்டு கொடி பயணிக்க இருக்கிறது”, என்கிறார் டபிள்யு.சி.சி.யின் துணை முதல்வர் நளினி சிங்காரவேல்.
நூற்றாண்டு காணும் கல்லூரி யின் மாணவியாக இருப்பதில் இருக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் சிலர் பகிர்ந்துகொண்டனர்.
என்றென்றும் இளமை
ஜெ.ஜெனிஃபா, மூன்றாம் ஆண்டு, பி.ஏ. ஆங்கிலம்
நூறு ஆண்டுகளாக எங்கள் கல்லூரி உருவாக்கி யிருக்கும் பெண்களைத் திரும்பிப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இப்படி வரலாற்றில் எப்போதும் பேசக்கூடிய நிகழ்வில் என் பங்கும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நூற்றாண்டு விழாப் பாடலை எழுதக் கிடைத்த வாய்ப்பை எப்போதும் மறக்க முடியாது. டபிள்யு.சி.சி. எப்போதும் இளமையாக இருப்பதற்கு இங்குள்ள ஆசிரியர்களின் உற்சாகமான மனநிலை ஒரு முக்கிய காரணம்.
எங்கெங்கும் பசுமை
அன்ட்ரினா அன்ட்ருஸ், இரண்டாம் ஆண்டு, பி.காம்.
எனக்கு கல்லூரியில் மிகவும் பிடித்தது அதன் பசுமை. டபிள்யு.சி.சி கேம்பசில் இருக்கும் மரங்களும், பல சின்ன சின்ன அழகான பூச்சிகளும் எப்போதும் இயற்கையோடு எங்களை நட்பு பாராட்டச் செய்துகொண்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டு விழா கொண் டாட்டங்களின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டிற்குள் நூறு மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிட்டி ருக்கிறோம். கல்லூரியில் தொடர்ந்து இயங்கிவரும் ரோட்டராக்ட் கிளப், யங் இந்தியன்ஸ கிளப், ஈகோ கிளப் போன்ற கிளப்புகள் எங்களுக்கு சமூக அக்கறையைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டி ருக்கின்றன.
எல்லோருக்கும் இடம் உண்டு
செருபினா ஃபிரெட்ரிக், முதல் ஆண்டு, பிசிஏ
கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பியானோ வாசித்தது கனவுபோல் இருக்கிறது. எனக்கு கால்பந்து ரொம்பப் பிடித்த விளையாட்டு. அந்த விளையாட்டைத் தொடர்வதற்கான வாய்ப்பு எனக்கு இங்கே கிடைக்கிறது. இப்படி விளையாட்டு, கல்சுரல்ஸ் என எல்லாவிதமான அம்சங்களுக்கும் எப்போதும் முக்கியத் துவம் கொடுப்பதால் டபிள்யு.சி.சி. இளமை யாகவே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT