Published : 24 Nov 2023 06:00 AM
Last Updated : 24 Nov 2023 06:00 AM
பயணங்கள் மனிதர்களின் வாழ்வை மாற்றக்கூடியவை. தனிப்பயணம், குழுப்பயணம், சாகசப் பயணம் எனப் பயணங்களில் பல வகை உண்டு. இதில் புதிதாக இணைந்திருக்கிறது ‘தொண்டுப் பயணம்’. இது ‘Voluntourism’ எனப்படுகிறது. இளைய தலைமுறைக்கு விருப்பமான முறையில், பட்ஜெட்டுக்குள் அடங்கும் இந்த தொண்டுப் பயணங்களுக்கான பிரத்யேக செயலிதான் ‘வேர்ல்ட் பேக்கர்ஸ்’ (Worldpackers).
உலகம் நம் கையில்: இந்தியாவுக்குள் அல்லது உலகின் எந்த நாட்டிலும் தொண்டுப் பயணம் மேற்கொள்ளலாம். வழக்கமான சுற்றுலாப் பயணத்தைப் போல அல்லாமல், தங்கும் இடத்துக்கு ஏதாவது ஒரு தொண்டு செய்ய வேண்டும். அதாவது, சுத்தம் செய்வது, மரம் நடுவது, சுவர் ஓவியங்கள் வரைவது, ஆவணப்படுத்துவது போன்று ஏதாவதொரு உதவி செய்ய வேண்டும். பதிலுக்கு தன்னார்வலருக்கான தங்குமிடம், உணவு போன்றவை கட்டணமின்றி அல்லது குறைந்த கட்டணத்துக்கு நிர்வாகத்தால் வழங்கப்படும். இப்படித்தான் தொண்டு பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT