Published : 10 Nov 2023 06:06 AM
Last Updated : 10 Nov 2023 06:06 AM
அணிப் போட்டியான கிரிக்கெட்டில் தனி ஒருவராக அணிக்கு வெற்றி தேடி தந்த இன்னிங்ஸ்கள் பல உண்டு. ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடையும் நிலையில் உள்ள போட்டியை தனி ஒருவராக வெற்றியாக்கி தந்த வீரர்கள் சற்று குறைவுதான்.
அந்த வகையில் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில்தேவ் ருத்ரதாண்டவம் ஆடிக் குவித்த 175 ரன்கள், 2011இல் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் ஆடிய சூறாவளி ஆட்டம் போன்ற சில போட்டிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன. அந்த வரிசையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விளையாடிய புயலாட்டமும் சேர்ந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT