Published : 13 Oct 2017 10:46 AM
Last Updated : 13 Oct 2017 10:46 AM
மி
தக்கும் நகரம் என்றழைக்கப்படும் வெனிஸ் நகரின் அடையாளம் ‘புரோகுராட்டி வெக்கி’ (Procuratie Vecchie). இது வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம்.
500 ஆண்டுகளாக இத்தாலிய அரச குடும்பம், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது, இந்தக் கட்டிடத்தைப் பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடிவுசெய்திருக்கிறது இத்தாலிய அரசு. வெனிஸ் நகரில் பியாசா சான் மார்கோவில் அமைந்திருக்கும் இந்தக் கட்டிடம், கலை நிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், கருத்தரங்குகள், அரசு நலத் திட்டங்களுக்காகப் பயன்படவிருக்கிறது.
பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் சர் டேவிட் சிப்பர்ஃபீல்ட், இந்தக் கட்டிடத்தைப் புனரமைக்க உள்ளார். 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், வெனிஸ் நகரின் மிக நீளமான (500 அடி) கட்டிடம் என்ற பெயரைப் பெற்றது. வெனிஸ் நகரத்துக்குச் சுற்றுலா செல்லும் பயணிகள் அனைவரும் இந்தக் கட்டிடத்தின் பின்னணியில்தான் அதிகமான ஒளிப்படங்களை எடுத்திருக்கின்றனர்.
இரண்டு நூற்றாண்டுகளாக, இந்தக் கட்டிடம் உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ‘ஜெனரலி குழும’த்தின் தலைமை அலுவலகமாக இயங்கிவந்தது. இந்தக் குழுமம்தான் தற்போது இந்தக் கட்டிடத்தைப் புனரமைப்பதற்கு நிதி உதவியும் அளித்திருக்கிறது. 2020-ம் ஆண்டுக்குள், இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு, பொது மக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 500 ஆண்டுகளாக இந்தக் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத மக்களுக்கு, இனி அந்தக் கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க இதன் மூலம் வாய்ப்பும் கிடைக்கவிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT