Last Updated : 06 Oct, 2017 10:39 AM

 

Published : 06 Oct 2017 10:39 AM
Last Updated : 06 Oct 2017 10:39 AM

வாழ்வு இனிது: கரடி பொம்மையை நேசிக்கும் பாட்டி!

 

ரடி பொம்மைகளுடன் விளையாடுவது இளம்பெண்களுக்குத்தான் பிடிக்கும் என்ற ஒரு பொதுவான அபிப்பிராயம் உண்டு. ஆனால், இந்த அபிப்பிராயத்தை உடைத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 68 வயது ஜாக்கி மிலே. கரடி பொம்மைகள் மீதான காதலால் 8,026 கரடிபொம்மைகளை வீட்டில் சேகரித்து வைத்து, புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார். 2000-ம் ஆண்டிலிருந்து கரடி பொம்மைகளைச் சேகரிக்கிறார் இவர். தெற்கு டகோட்டாவில் உள்ள இவரது வீடு முழுவதும் தற்போது கரடிபொம்மைகள் நிறைந்துகிடக்கின்றன.

“நான் குழந்தையாக இருந்தபோது என்னிடம் கரடி பொம்மைகள் இருந்ததில்லை. எனக்கு எட்டு வயது இருக்கும்போதுதான் முதன்முதலில் ஒரு கரடி பொம்மையைக் கண்காட்சியில் பார்த்தேன்” என்கிறார் ஜாக்கி.

6chgow_Grandma Jackie1

கரடி பொம்மைகளால் ஈர்க்கப்பட்ட இவர், அந்த மாகாணத்தில் இருக்கும் கடைகளில் தேடித்தேடி கரடி பொம்மைகளை வாங்கியிருக்கிறார். பயணம் சென்ற இடங்களில் எல்லாம்கூடக் கரடி பொம்மைகளை வாங்கிக் குவித்திருக்கிறார்.

அவரிடம் 3,000 கரடிபொம்மைகள் சேர்ந்தவுடன், நண்பர்கள் அதை கின்னஸ் சாதனைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.

தற்போது அவரிடம் இருக்கும் மிகச் சிறிய கரடி பொம்மையின் அளவு - முக்கால் அங்குல உயரம். மிகப் பெரிய கரடி பொம்மையின் அளவு எட்டு அடி. அவரது கரடி பொம்மை சேகரிப்பைச் சாதனையாக ஏற்றுக்கொண்ட கின்னஸ் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

‘ஜாக்கி பாட்டி’ என்று அழைக்கப்படும் இவரிடம் 29 நாடுகளைச் சேர்ந்த கரடி பொம்மைகள் இருக்கின்றன.

இந்தக் கரடி பொம்மைகள் சேகரிப்பை ‘டெடி பியர் டவுன்’ என்ற பெயரில் தெற்கு டகோட்டாவின் ‘ஹில் சிட்டி’யில் கண்காட்சியாகவும் அவர் வைத்திருக்கிறார். இந்த ‘டெடி பியர் டவுன்’ அங்குவரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x