Published : 21 Apr 2023 06:08 AM
Last Updated : 21 Apr 2023 06:08 AM
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுடன் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகிய வற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது ‘ஏ படம்’. மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் அம்பேத்கராக ராஜகணபதி நடித்து, தயாரித்துள்ள இப்படத்தை ‘கேஸ்ட்லெஸ்’ சிவாகோ இயக்கியிருக்கிறார். மேகா , சுஷ்மிதா கதாநாயகிகளாக நடிக்க, சந்திரபோஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகரும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் பேசும்போது ’படத்துக்கு 44 வெட்டுக்களைத் தணிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக’ தெரிவித்தார்.
அபிராமியைக் கவர்ந்த கதை! - கடந்த மாதம் ‘செங்களம்’ இணையத் தொடரை வழங்கிய ஜீ5 ஓடிடி தளம் இந்த மாதம் ‘ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி’ என்கிற ஒரிஜினல் தொடரை வழங்கியுள்ளது. ஒரு இடைவெளிக்குப் பிறகு இதில் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் அபிராமி.
இதன் அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “ இது எனது முதல் வெப் சீரிஸ். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டரில் நடிப்பார்கள்.
ஆனால் நான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கக் காரணம் இதன் திரைக்கதைதான். டீன் பையன்கள், பெண்களின் உலகை அவ்வளவு இயல்பாகத் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நான் ஏற்றுள்ள அம்மா கதாபாத்திரம் அவ்வளவு அழகாக வந்துள்ளது” என்றார். ‘சொல் புரொடக் ஷன்’ சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இத்தொடரை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT