Published : 27 Jan 2023 06:38 AM
Last Updated : 27 Jan 2023 06:38 AM

ப்ரீமியம்
ஏ.எல்.சீனிவாசன் நூற்றாண்டு | தனிப்பெரும் தலைமை

கருணாநிதி மற்றும் ஏவி. மெய்யப்பனுடன்

நூறாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பத்துப் படைப்பாளுமைகள் எனப் பட்டியலிட்டால் கவியரசர் கண்ணதாசனுக்கு நிச்சயம் இடமுண்டு. அவரைப் பற்றி உரையாடி, நினைவு கூர்கிற அளவுக்கு, அவருடைய குடும்பத்திலிருந்து வந்து திரையுலகில் சாதனைத் தடம் பதித்தவர்கள் குறித்து நாம் பேசுவதில்லை.

கண்ணதாசனின் உடன்பிறந்த அண்ணன் ஏ.எல். கண்ணப்பனின் மகன் பஞ்சு அருணாசலம் ஒரு வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக விளங்கினார். பாடலாசிரியராகவும் கவனிக்க வைத்தார். ஆனால், இவர்கள் அனைவருக்கும் பாதை போட்டுக் கொடுத்தவர் ‘ஏ.எல்.எஸ்’ என்று கம்பீரமாக அழைக்கப்பட்ட ஏ.எல்.சீனிவாசன். தமிழ் சினிமா தயாரிப்பிலும் தமிழ் சினிமாவுக்கு தேசிய அரங்கில் கவனம் பெற்றுக் கொடுத்ததிலும் பல முன்மாதிரிகளை உருவாக்கியவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x