Published : 30 Dec 2022 11:10 AM
Last Updated : 30 Dec 2022 11:10 AM

ப்ரீமியம்
கோலிவுட் ஜங்ஷன்: ‘காதலில் விழுந்த’ இயக்குநர்!

சிறு முதலீட்டுப் படங்களை வாங்கி, சினிமா வியாபாரத்தில் சன் பிக்சர்ஸ் ஈடுபாடு காட்டிய 2008இல் வெளியிட்ட மெகா வெற்றிப் படம் ‘காதலில் விழுந்தேன்’. அதை எழுதி, இயக்கி, அதில் இடம்பெற்ற ‘நாக்க மூக்கா’ பாடலையும் எழுதியவர் பி.வி. பிரசாத். அவர் தற்போது ‘சகுந்தலாவின் காதலன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதி, இயக்கி, இசையமைத்து, பாடல்கள் எழுதி, நாயகனாகவும் அறிமுகமாகிறார். நடிப்பு, தோற்றம் இரண்டாலும் ரசிகர்களைக் கவர்ந்த ‘தாமிரபரணி’ பானு இதில் கதாநாயகி. எழுத்தாளர் அ.வெண்ணிலா வசனம் எழுதியிருக்கிறார். மற்றொரு எழுத்தாளர் ஏகம்பவாணன் இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். படம் பற்றி இயக்குநர் கூறும் போது, “உண்மையை நேருக்கு நேராகத் துணிவுடன் எதிர்கொள்கிற ஒரு பெண். அவள்தான் சகுந்தலா. தனக்குத் துன்பம் கொடுத்த ஒரு விளிம்பு நிலை மனிதனை வாழ்க்கையின் பாதாளத்திலிருந்து அவள் எப்படி மீட்டெடுக்கிறாள், அவளை, அவன் எப்படிப் புரிந்துகொள்கிறான், அதற்காக அவன் செய்யும் சாகசங்கள் என்ன என்கிற ஓட்டத்தில் உலுக்கும் திருப்பங்கள்தான் படம். இந்தக் கதையை ஐந்து கதாபாத்திரப் பார்வைகள் வழியாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x