Published : 11 Oct 2019 12:50 PM
Last Updated : 11 Oct 2019 12:50 PM
இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ இரண்டுமே கிராமியக் கதைப் பின்னணியில் எடுக்கப்பட்டு வெற்றிபெற்றவை. தற்போது சிவா - ரஜினி இணையும் படத்தின் கதைக் களமும் கிராமம்தான் என்பது இயக்குநர் வட்டாரம் தரும் தகவல். இந்தப் படத்துக்கு இமான் இசையமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், கதாநாயகி தேர்வு நடந்துவருகிறது. விரைவில் படம், படக்குழு பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மீண்டும் இணையும் கூட்டணி
‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் வெற்றி மாறன். இதற்காகத் தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்கி பெரிய கதாநாயகன் ஒருவருக்கான திரைக்கதை உருவாக்கத்தில் தனது உதவியாளர் களுடன் ஈடுபட்டு இருப்பதாகத் தெரி கிறது. தயாரிப்பாளர் தாணுவிடம் இரண்டு முன்னணிக் கதாநாயகர்களின் கால்ஷீட் கைவசம் இருப்பதாகவும் அந்த இருவரில் வெற்றிமாறன் யாரை இயக்கப்போகிறார் என்பது விரைவில் தெரியவரும் என்கிறது தயாரிப்பாளர் வட்டாரத் தகவல்.
வருகிறார் ஒரு வாரிசு
அருண் விஜய் நடிப்பில் ‘வா டீல்’, விஜய் சேதுபதி நடிப்பில் ‘றெக்க’ ஆகிய படங்களை இயக்கியவர் ரத்தின சிவா. இவர் அடுத்து இயக்கும் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ‘சீரு’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பவர் டி.இமான். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலைப் பிரபல பாடகரான சங்கர் மகாதேவனின் மகன் ஷிவம் மகாதேவனை அழைத்துப் பாட வைத்திருக்கிறாராம். இத்தகவலை டி.இமானே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காதல் தொடரும்!
வெற்றிமாறனின் ‘விசாரணை’ படத்தில் தினேஷும் ஆனந்தியும் சில காட்சிகளில் சந்திப்பதுபோல காட்சி அமைத்திருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். அது யதார்த்தமாக இருந்தாலும் இந்த ஜோடி தங்கள் காதலைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் சமூக வலையில் பதிவிட்டார்கள். இந்த ஜோடியை ‘விசாரணை’யை விட அழுத்தமான விளிம்பு வாழ்வைப் பேசவரும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தில் காதல் செய்ய வைத்திருக்கிறாராம் இயக்குநர் அதியன் ஆதிரை. உதவியாளருக்காக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பா. இரஞ்சித். நவம்பர் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது இந்தப் படம்.
நானும் ஒருத்தி!
இன்று வெளியாக விருக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ என்ற நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. படத்தின் பத்திரிகையாளர் சந்திப் பில் கலந்து கொண்ட அவர், மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டார். “ படத்தில் நானும் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறேன்.
முனீஸ்காந்த் உட்பட இந்தக் கதையில் நடித்திருக்கும் அனைவருமே கதைக்கு முக்கியமானவர்களாக இருக்கும்போது எனது பெயரை மட்டும் போட்டிருப்பது அவர்களைக் குறைத்துக் கூறுவதுபோல் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT