Last Updated : 14 Jul, 2015 10:52 AM

 

Published : 14 Jul 2015 10:52 AM
Last Updated : 14 Jul 2015 10:52 AM

நகைச்சுவை மட்டுமல்ல.. சீரியஸாகவும் எழுதத் தெரிந்தவர் கிரேஸி மோகன்: ‘சாக்லேட் கிருஷ்ணா 777’ விழாவில் கமல் பெருமிதம்

கடந்த 1979-ம் ஆண்டு தொடங்கி 6,000 மேடைகளுக்கு மேல் நாடகங்கள் நிகழ்த்தி சாதனை புரிந்துவரும் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவினர், 2008-ல் புதிதாக மேடையேற்றிய நாடகம் ‘சாக்லேட் கிருஷ்ணா’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாடகம் 777-வது முறையாக கடந்த சனிக்கிழமை சென்னை யில் நடத்தப்பட்டது. இதை பெரும் விழாவாக கொண்டாடினர். இதில் கமல்ஹாசன், ‘சித் ராலயா’ கோபு, நல்லி குப்புசாமி, கிரேஸி மோகன் மற்றும் குழுவினர் கலந்துகொண் டனர். விழாவில் பிரபலங்கள் பேசியதாவது:

நல்லி குப்புசாமி:

‘களத்தூர் கண்ணம்மா’ வில் தொடங்கி கமல்ஹாசனை பார்த்துவரு கிறேன். சமீபத்தில் ‘பாபநாசம்’ பார்த்தபோது குறிப்பிட்ட சில காட்சிக்கு மட்டும் வெளியே போய்விட்டேன். அருகில் இருந்த நண்பர்கள் ஏன் என்றனர். ‘போலீஸ் ஸ்டேஷனில் கமல் அடிவாங்குவதை பார்க்க முடியாது’ என் றேன். மலையாளத்தில் வந்த ‘த்ரிஷ்யம்’ படத்தை பார்த்ததால் அந்த காட்சி எனக்கு முன்பே தெரிந்திருந்தது. இங்கு அவரால் மட்டும்தான் இதுபோன்ற படங்களில் நடிக்க முடியும்.

‘சித்ராலயா’ கோபுவும், நானும் காஞ்சி புரத்து ஆட்கள். அவர் இயக்குநர் தரின் வகுப்புத் தோழர். அந்த காலத்திலேயே சினிமாவில் காமெடிக்கு என்று தனி டிராக் வைத்து வசனம் எழுதியவர். 1959-ல் வந்த ‘கல்யாண பரிசு’ படத்தின் காமெடி இன்றைக்கும் பேசப்படுகிறது.

‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் மேடை யேறத் தொடங்கி 10 ஆண்டுகள்கூட ஆக வில்லை. அதற்குள் 777-வது மேடை கண் டிருக்கிறது. ஆண்டுக்கு 110 மேடை என் றாலும், 3 நாட்களுக்கு ஒரு மேடை என்று கணக்காகிறது. ஒரு விஷயத்தை குழந்தை களுக்கு பிடித்த மாதிரி எடுத்துவிட்டால் கண்டிப்பாக வெற்றிதான். அதைத்தான் இந்த நாடகமும் செய்திருக்கிறது.

‘சித்ராலயா’ கோபு:

நான் கடந்த 10 ஆண்டுகாலமாக நாடகம், சினிமா பக்கம் வந்ததில்லை. ஆனாலும் என்னை தனது ‘மானசீக குரு’ என்கிறார் கிரேஸி மோகன். ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன் பாராட்டும் இந்த அன்பு நெகிழவைக்கிறது.

நான் சினிமாவில் பணிபுரிந்துவிட்டு நாடகத்துக்கு வந்தவன். நாடகம் போடு வது கடினமான வேலை என்பது எனக்கு தெரியும். எல்லா நடிகர்களுக்கும் இணை யான முக்கியத்துவம் கொடுத்து எழுத வேண் டும். பார்வையாளர்களின் ரியாக்‌ஷன் என்ன என்பதை நாடகங்களில்தான் உடனடியாக பார்க்க முடியும்.

அந்த கணத்திலேயே ரசிகர்களை ஈர்க்கும்படியாக, நாடகத்துடன் ஒன்றிப்போகும்படியாக ஏதோ ஒன்று அதில் இருக்க வேண்டும். ஒரு நாடகம் 777-வது முறையாக அரங்கேறுவது மாபெரும் வெற்றி. இந்த வெற்றிக்கு காரணம் அவர்களது உழைப்பு, ஒற்றுமை. கிரேஸி மோகன் இந்த குழுவை ஒற்றுமையாகக் கொண்டுபோவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரத்தில் இருந்து பார்க்கிறேன். அவரது வளர்ச்சி ராக்கெட் மாதிரி எனக்கு அப்போதே தெரிந் தது. எடிட்டிங், கேமரா, டிஜிட்டல் என்று அனைத்தையும் படித்து முடித்திருக்கிறார். ‘எனக்கு பட்டங்கள் மீது நம்பிக்கை இல்லை. நடிகனாக இருப்பதில்தான் மகிழ்ச்சி’ என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார். இன் றைக்கு உலக சினிமா பற்றி ஒரு புத்தகம் போட்டால் அதில் ஏற்படும் சந்தேகங்களை எல்லாம் கமல்ஹாசனிடம் வந்து தீர்த்துக் கொள்ளலாம். உலக நாயகன் என்றால் உண்மையிலேயே கமல்தான். எனக்கு 84 வயதாகிறது. என் வயதிலும் கமல் ஒரு இயக்குநராக திகழ்வார்.

கிரேஸி மோகன்:

‘சாக்லேட் கிருஷ்ணா’ கட்டாயம் 1000-வது மேடைக்கு போகும். அப்போதும் கட்டாயம் கமல் வருவார். அவர்தான் எங்களுக்கு ஆயிரத்தில் ஒருவர். இந்த மேடையில் பாலசந்தர் சார் இல்லை என்று நினைக்கும்போது வலிக்கிறது. அவரது ரத்தத்தின் ரத்தமாக கமல் சாரைத்தான் நினைக்கிறோம்.

எனக்கு நகைச்சுவை உணர்வு எப்படி வந்தது என்று பலமுறை நானே யோசித்திருக் கிறேன். ‘காசேதான் கடவுளடா’, ‘கல்யாண பரிசு’, ‘காதலிக்க நேரமில்லை’ இப்படி பல படங்களுக்கு நகைச்சுவை கொப்பளிக்க வசனம் எழுதிய கோபு சார்தான் எனக்கு குருநாதர்.

1979-ல் தொடங்கிய நாளில் இருந்து இன்றளவுக்கும் கிரேஸி கிரியேஷன்ஸ் குழு ஒற்றுமையாக இருப்பதால்தான் எங் களுக்கு எல்லாம் சாத்தியமாகிறது. கூட்டுக் குடும்பமாக வசிப்பவன் நான். என் 2-வது கூட்டுக் குடும்பம் இந்த நாடகக்குழு.

‘சாக்லேட் கிருஷ்ணா’வின் 500-வது நிகழ்ச்சிக்கே வந்துவிட வேண்டும் என்றார் கிரேஸி மோகன். எப்படியும் இன்னும் பல மேடைகளை சந்திக்கும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து தள்ளிப் போட்டேன். இன்னும் கொஞ்சம் நாள் போனால் 1000-வது மேடையே வந்துவிடும். அதற்குள் கலந்துகொள்ள வேண்டுமே என்று ஓடிவந்துவிட்டேன்.

கமல்ஹாசன்:

இந்த விழாவை ‘சித்ராலயா’ கோபுவுக்கு மரியாதை செய்யக்கூடிய ஒரு விழாவாகத் தான் நானும், மோகனும் பேசி முடிவுசெய் தோம். இந்த யோசனையை மோகன் என் னிடம் கூறியபோது, இங்கு நிற்கும் கிருஷ் ணாவே (கிருஷ்ணர் வேஷத்தில் இருந்த கிரேஸி மோகனை பார்த்து) சாக்லேட் கொடுத் ததுமாதிரி இருந்தது. அனந்து சார்தான் எனக்கு கோபு சாரை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்புகூட, இவர்தான் கோபு என்று தெரியாமலேயே பலமுறை இவருடன் பய ணித்திருக்கிறேன்.

அனந்து- கோபு இருவரது நட்பை பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்கும். பணி செய்து கிடப்பதில்தான் அவர்கள் இருவருக்குமே அலாதியான மகிழ்ச்சி. வேலை வேலை என்று அப் படியே 20 ஆண்டுகள் இருந்திருப்பார்கள். இயக்குநர் தருக்கு கிடைக்கும் புகழை எல்லாம் தனக்கே கிடைத்தது மாதிரி அவரது பின்னால் நின்று பெருமைப்படுத்தியவர் கோபு. இந்த நகைச்சுவை நாடகத்தில் கண்ணீர் ததும்பும் அளவுக்கு மகிழ்ச்சியில் நிற்கிறேன்.

நான் டிகேஎஸ் நாடகக் குழுவில் இருந்தவன். ஒரு நாடகத்தை 1000 முறை மேடையேற்ற எப்படியும் 20 ஆண்டுகள் ஆகும். ஆனால், குறுகிய காலத்துக்குள் 777-வது மேடை கண்டிருக்கிறது ‘சாக்லேட் கிருஷ்ணா’. இது பெரும் சாதனை. இன் றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொன்னாலும், நாடகத்தை பார்க்க ரசிகர்கள் வரவேண்டுமே. இங்கே வந்து கொண்டே இருக்கிறார்கள்.

நகைச்சுவை நாடகம் போல, சீரியஸ் நாடகமும் கிரேஸி மோகனுக்கு எழுத வரும். அவர் ஏனோ அதை செய்வதே இல்லை. நாடகம்போல கவிதை, ஓவியம் என்று பன் முகம் கொண்ட கலைஞன் அவர். இதற்கெல் லாம் முக்கியமான காரணம், அவர் ஒரு நல்ல ரசிகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x