Last Updated : 29 May, 2015 11:51 AM

 

Published : 29 May 2015 11:51 AM
Last Updated : 29 May 2015 11:51 AM

சூழல் ஒன்று பார்வை இரண்டு- 3: மலர்கள் மலர்வது எனக்காக...

இயற்கைக் காட்சிகளை ரசிக்காதவர் யார் இருக்க முடியும்? ஆனால் இவை நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் ஒரே மாதிரியானவை அல்ல. வனத்திலும் நிலத்திலும் வாய்க்கால் ஓரத்திலும் பயணிக்கும் தருணங்களில் இயற்கைக் காட்சிகள் தரும் உணர்வை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தும் இரண்டு பாடல்களைப் பார்ப்போம்.

எனக்கென எதுவும் இல்லை, எல்லாம் பொது என்கிறது இந்திப் பாடல். இயற்கையின் அழகெல்லாம் எனக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்கிறது தமிழ்ப் பாடல். இரண்டுமே இயற்கையை வெவ்வேறு விதமாக ஆராதிக்கின்றன.

இந்திப் பாடல்

படம்: பரிச்சய் (அறிமுகம்). பாடலாசிரியர்: குல்ஜார்; பாடியவர்: கிஷோர் குமார்; இசை: ஆர்.டி. பர்மன்.

பாடல்:

முசாஃபிர் ஹூம் யாரோன்

ந கர் ஹை ந டிக்கானா

முஜே சல்த்தே ஜானா ஹை

பஸ் சல்த்தே ஜானா

ஏக் ராஹ் ருக் கயீ தோ அவுர் ஜுட் கயீ

மே முடா தோ ராஹ் சாத் சாத் முட் கயீ

பொருள்:

நான் ஒரு வழிப்போக்கன் - நண்பனே

வீடு, இருப்பிடம் எதுவும் எனக்கில்லை

சென்றுகொண்டிருப்பதே என் பணி - ஓரிடம்

நின்றுகொண்டிருக்காமல். எப்பொழுதும்

பயணித்துவந்த பாதை ஒன்று பாதியில்

நின்று போய் பயணம் நின்றது - உடன்

வேறு திசையில் திரும்பிய என்னுடன்

திரும்பியது என்னுடைய பயணப் பாதையும்

(ஏனெனில்) என் இருப்பிடம் இருப்பது

இறக்கை கட்டிவிடும் காற்றில் அல்லவா

பகல் இங்கே தடுத்து பக்கம் அமர்த்தினால்

இரவு அங்கே சைகையால் எனை அழைக்கும்

காலையும் மாலையும் என் கவின் தோழர்கள்.

நான் ஒரு வழிப்போக்கன் -நண்பனே

வீடு, இருப்பிடம் எதுவும் எனக்கில்லை

சென்றுகொண்டிருப்பதே என் பணி.

தமிழ்ப் பாடல்

படம்: பாசம்; இசை: விஸ்வனாதன், ராமமூர்த்தி;

பாடல்: கண்ணதாசன்; பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்.

உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக

அன்னை மடியை விரித்தாள் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே

கடலில் தவழும் அலைகளிலே

இறைவன் இருப்பதை நான் அறிவேன்

என்னை அவனே தான் அறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம்

தாரகை பதித்த மணிமகுடம்

குயில்கள் பாடும் கலைக்கூடம்

கொண்டது எனது அரசாங்கம்

எல்லாம் எனக்குள் இருந்தாலும்

என்னைத் தனக்குள் வைத்திருக்கும்

அன்னை மனமே என் கோயில்

அவளே என்றும் என் தெய்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x