Last Updated : 22 May, 2015 11:26 AM

 

Published : 22 May 2015 11:26 AM
Last Updated : 22 May 2015 11:26 AM

டப்பிங் தொடர்களை வளர விடக்கூடாது: சின்னத்திரை நடிகை சந்திரா

‘கோலங்கள்’ தொடரில் அறிமுகமாகி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் மலையாள சேனல்களில் தனி முத்திரை பதித்து வருபவர் சந்திரா. சின்னத்திரையுடன் பல திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாசமலர்’ தொடரில் நடித்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து..

சின்னத்திரையில் இத்தனை ஆண்டுகளாக நாயகியாக நீடித்திருக்க காரணமென்ன?

பொருத்தமான கதைகளைத் தேர்ந் தெடுப்பது, ஒரே நேரத்தில் அதிக தொடர் களில் நடிக்காதது போன்ற உறுதியான முடிவுகளை நான் எடுப்பதால்தான் இது சாத்தியமாகியுள்ளது. நான் ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களுக்கு மேல் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன்.

அதுபோல் சிறந்த கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நடிக்கும் தொடரின் கதையை முழுமையாக உணர்ந்து பிரதிபலிக்கும் போதுதான் நம்மை சரியாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். பணத்துக்காக மட்டும் நடித்தால் ரசிகர்களால் ஒதுக்கித் தள்ளப்படுவோம்.

பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு தொடரில் நடிக்கிறீர்களே?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலுங் கில் ஜெமினி டிவிக்காக ‘மமதல கோவெலா’ (தமிழில் ‘சொந்தம் பந்தம்' என்ற பெயரில் ஒளிபரப்பானது) என்ற தொடரில் நடித்தேன். அதன் பிறகு தமிழில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். தமிழில் இப்போது ஒளிபரப்பாகிவரும் ‘பாசமலர்’ தொடரில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் அமைந் துள்ளது.

இதில் எனது பாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல இப்போது தெலுங்கில் மா டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள ‘சீதகோகா சிலுகா’ தொடரிலும் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் நடித்து வருகிறேன்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை யில் இருக்கிறீர்கள். தற்போது சின்னத் திரையின் டிரண்ட் எப்படி உள்ளது?

கே.பாலசந்தர், பாலுமகேந்திரா ஆகியோர் சின்னத்திரையில் கவனம் செலுத்திய நாட்களில் வித்தியாசமான கதைகளைக் கொண்டு வந்தார்கள். அதன் பிறகு குடும்பக் கதைகள் முக்கியத்துவம் பெற்றன. தற்போது மீண்டும் பெண்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் விதமான கதைகள் வரத்தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் நடிப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழில் டப்பிங் சீரியல்கள் அதிகரித்து வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நமது தொடர்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து ஒளிபரப்ப யாரும் முயற்சிப்பதில்லை. சின்னத்திரையை சார்ந்து 1600-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். ஒரு டப்பிங் தொடர் வருவதால் இவர்களில் 100 பேருக்கு மேல் வேலையில்லாமல் போகிறது.

ஹிந்தியில் ஒரு தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் பல லட்ச ரூபாய் செலவு செய்து எடுக்கப்படுகிறது. ஆனால் இங்கே சில ஆயிரம் ரூபாய்களில் மட்டுமே எடுக்கப்படுகிறது. கதைகளில் உள்ள யதார்த்தம், இயற்கையான விஷயம் ஆகியவற்றை வைத்து பார்த்தால் நமது தொடர்கள்தான் சிறந்தது. டப்பிங் தொடர்களை தொடர்ந்து வளர விடக்கூடாது.

உங்கள் திருமணம் எப்போது?

இப்போதைக்கு நான் நடிக்கும் நேரம் போக, பெற்றோர் உதவியுடன் சென்னையில் ‘மியூரல் ஆரா’ என்ற பெயரில் கேரள மியூரல் பெயிண்டிங் டிசைன் டிரெஸ்ஸிங் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறேன். என் திருமணத்தைப் பற்றி எனது பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x