Published : 13 Mar 2015 11:17 AM
Last Updated : 13 Mar 2015 11:17 AM
மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வருவது தவிர்க்க முடியாத ஒன்று. இது நாம் தினமும் காணும் இரவு. பகல், வெயில், நிழல் போன்ற இயற்கை நிகழ்வுகளுக்கு ஒப்பானது. இந்த வாழ்வியல் தத்துவத்தின் உணர்வு ஒரேவிதம் வெளிப்படும் எளிய வரிகள் மற்றும் இனிமையான மெட்டில் அமைந்த தமிழ் - இந்திப் பாடல்களை பார்ப்போம். உரையாடல் வழக்கில் பிரபலம் அடைந்த இந்த இரு மொழிப் பாடல்களின் முதல் வரிகளே இந்தி - தமிழ் திரைப்படங்களின் பெயராகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கப்படி முதலில் இந்திப் பாடல்.
படம்: கபி தூப் கபி சாவ்
(சில சமயம் நிழல் சில சமயம் வெயில்)
பாடல் ஆசிரியர்: கவி பிரதீப். பாடியவரும் அவரே! இசை: சித்ரகுப்தா.
சுக் துக் தோனோ ரஹத்தே ஜிஸ்மே
ஜீவன் ஹை வோ காவ்
கபி தூப் கபி சாவ், கபி தூப் கபி சாவ்
பலே பீ தின் ஆத்தே ஜகத் மே
புரே பீ தின் ஆத்தே
.. .. ..
.. .. ..
பொருள்:
இன்பமும் துன்பமும் ஜீவ நாடியாய்
இருக்கும் அந்த ஊரில்
சில சமயம் நிழல் சில சமயம் வெய்யில்
(என இருக்கும்)
நல்ல காலமும் வருகிறது உலகத்தில்
கெட்ட காலமும் வருகிறது.
தன் செயல்களின் விளைவிற்கேற்ப
கசப்பு, இனிமை என்ற கனியை
இங்கு அனைவரும் பெறுவர்.
சிலசமயம் இடைஞ்சலாக, சில சமயம் இசைவாகப்
படுகின்றன காலத்தின்
விசித்திரக் கால்கள் (நம் மேல்)
எத்தனை மகிழ்ச்சி எத்தனை துன்பம் (என)
மீண்டும் மீண்டும் எதிர்கொள்கிறோம்
இறைவனின் விருப்பத்தின் படியே
இந்த உலகம் எல்லாம் நடக்கிறது
கவனமாகச் செலுத்து
உலகு என்ற நதியில்
சுழலும் உன் படகின் துடுப்பை.
சில சமயம் நிழல் சில சமயம் வெயில்
தனக்கே உரிய வசீகர உடல் மொழியுடன் தமிழ்த் திரை உலகில் வெகுகாலம் வெற்றி வலம் வந்த ஜெய்சங்கருக்கு திரைப் பிரவேசம் அளித்த இந்தப் படத்தின் பாடலை இனிப் பார்ப்போம் .
படம் : இரவும் பகலும்.
பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்
பாடல்ஆசிரியர் : ஆலங்குடி சோமு
இசை : டி. ஆர். பாப்பா என்ற சிவசங்கரன்.
பாடல்: இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்
இதயம் ஒன்றுதான்
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான்
பிறவி ஒன்றுதான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்
இதயம் ஒன்றுதான்.
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான்
பிறவி ஒன்றுதான்.
வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான்
வாழ்க்கை ஒன்றுதான்
இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
உடலும் ஒன்றுதான்
தனிமை வரும் துணையும் வரும் பயம் ஒன்றுதான்
பயணம் ஒன்றுதான்
விழி இரண்டு இருந்தபோதும் பார்வை ஒன்றுதான்
பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான்
தெய்வம் ஒன்றுதான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்
இதயம் ஒன்றுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT