Published : 27 Feb 2015 10:56 AM
Last Updated : 27 Feb 2015 10:56 AM
சுகமான சுமை என்று சொல்லத்தக்க காதல் வந்துவிட்டால் அறிவு சொல்வதை மனது கேட்பதில்லை. தம்மை மீறி நடக்கும் மனதின் இந்த அத்துமீறல் செயலை ஆனந்தமாகப் பாடும் நாயக-நாயகியின் உணர்வை மட்டுமின்றி மெலடி, காட்சியாக்கம் ஆகியவற்றைக்கூட ஒரே அளவில் வெளிப்படுத்தும் இந்தி - தமிழ் பாட்டுகள் இவை.
வழக்கப்படி முதலில் இந்திப் பாட்டு.
படம் : தில் ஹை கி மான்த்தா நஹீன் (1991)
பாடல் ஆசிரியர் : ஃபையஜ் அன்வர்.
பாடியவர்கள் : குமார் சானு - அனுராதா புடவல்.
இசை : நதீன் ஷ்ரவன்.
பாடல் :
தில் ஹை கே மான்த்தா நஹீன்
யே பேக்கராரி கியோன் ஹோ ரஹீன் ஹை
யே ஜான்த்தான நஹீன்
தேரி வஃபாயே தேரி முஹபத் சப் குச்
ஹை மேரே லியே
… …
… …
பொருள்:
உள்ளம் ஒப்புக்கொள்வதில்லை
இந்த உளைச்சல் ஏன் ஏற்படுகிறதென்று
ஒன்றும் தெரியவில்லை
உன்னுடைய ஊடல் உன் காதல் அனைத்தும்
எனக்காக மட்டுமே (ஏன் என்று தெரியவில்லை)
நீ (உன்) உள்ளத்தைப் பரிசாக (எனக்கு) அளித்தாய்
நானோ உனக்காகவே மட்டும் வாழ்கிறேன்
இது உண்மை என்பதை எல்லோரும் அறிவர்
உனக்கும் (இதில்) முழு நம்பிக்கை இருக்கிறது.
நான் உன்னைக் காதலிக்கிறேன் (என்பது)
எனக்கு இதுதான் தெரியும்
தனிமை என்னுடைய வாழ்வைக் கடினமாக்கியது.
நீ எனக்குக் கிடைத்திருக்காவிடில்
தடுமாறிய (என்) சுவாசமும்
ஒளியிழந்த (என்) கண்களும்
போதும் போதும் இனி தாங்காது
எனக் கூறத் தொடங்கிவிட்டன.
தமிழ்ப் பாட்டு:
படம் :காதல் வைரஸ்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் : வாலி
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், ஹரிணி
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்லத் தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
(சொன்னாலும் கேட்பதில்லை)
ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்யக் கூடும்
உன்னைப்போல அல்ல
உண்மை சொன்னது
(சொன்னாலும் கேட்பதில்லை)
உனைத்தவிர எனக்கு
விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே
சூரிய விளக்கில்
சுடர் விடும் கிழக்கு
கிழக்குக்கு நீ தான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும் என்னைப் புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
(சொன்னாலும் கேட்பதில்லை)
ஓ நங்கை உந்தன் நெஞ்சம்
நான் கொடுத்த லஞ்சம்
வாங்கிக்கொண்டு இன்று உண்மை சொன்னது
(சொன்னாலும் கேட்பதில்லை)
விழிச்சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல் நடித்தாய்
தினம்தினம் துவண்டேன் தளிரே
நதியென நான் நடந்தேன்
அலை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும் என்னைப் புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
ஓரு பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே வஞ்சிக்கொடியே
(சொன்னாலும் கேட்பதில்லை)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT