Published : 05 Jun 2016 09:10 AM
Last Updated : 05 Jun 2016 09:10 AM
காவல் துறை வேலையை லட்சியமாகக் கொண்ட நிக்கி கல்ரானி, காத லிக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் பணத் தைத் தொலைத்துவிட்டு அல்லாடும் விஷ்ணு விஷால், இரு வருக்கும் இடையில் ஏற்படும் காதல், உள்ளூர் எம்.எல்.ஏ. நடத்தும் இலவசத் திருமண நிகழ்ச்சியில் ஒரு ஜோடி குறைந்ததால் நடிப்புத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் சூரிக்கு ஏற்படும் அவஸ்தைகள்... இவை ஒரு புறம்.
நெடு நாட்கள் கோமாவில் இருந்து இறந்துபோகும் ஒரு அமைச்சர் சேர்த்துவைத்திருக்கும் 500 கோடி ரூபாய் குறித்த ரகசியம் எம்.எல்.ஏ. ‘ஜாக்கெட்’ ஜானகிராமனுக்கு (ரோபோ சங்கர்) மட்டும்தான் தெரியும். அவரோ விபத்தில் சிக்கிப் பத்து வயதுக் குழந்தையின் நிலைக்குப் போய்விடுகிறார். அவரிடமிருந்து அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள் வதற்காக அரசியல்வாதிகள் துரத்துகிறார்கள்... இந்தச் சிக்கல் ஒரு புறம்.
இந்த இரண்டு பாதைக ளையும் இணைத்து காமெடி கலாட்டாவாக படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் எழில். நகைச்சுவைப் படம் என்பதால் லாஜிக் எதுவும் தேவையில்லை என்பதில் உறுதி யாக இருக்கிறார். ஆனால், கதையின் சம்பவங்கள் கொஞ்சமா வது ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டாமா? லஞ்சம் கொடுப்பது தொடர்பான காட்சிகள் எல்லாம் காமாசோமாவென்று இருக்கின்றன. போலீஸ் வேலைக் கான முயற்சியில் தீவிரமாக இறங்கும் பெண்ணுக்கு டிஜிபி யார் என்பதுகூடவா தெரியா மல் இருக்கும்? சூரியின் நடிப் புக் கல்யாணத்தை வைத்து செய் யப்படும் காமெடி மலிவான ரசனையின் வெளிப்பாடு.
எல்லாக் காட்சிகளும் கிச்சு கிச்சு மூட்டினாலும் எதிலுமே நேர்த்தி இல்லை. தவிர, இந்த இடத்தில் பாட்டு, இந்த இடத்தில் சண்டை, இந்த இடத்தில் காதல் என்று எளிதாக ஊகிக்கக்கூடிய திரைக்கதை படத்தை மந்தமாக்குகிறது.
சூரியின் கல்யாணம் தொடர் பான கலாட்டாக்களை மட்டுமே நம்பி நகர்ந்து செல்லும் திரைக் கதை ரோபோ சங்கர் விபத்துக்குப் பிறகு சூடு பிடிக்கிறது. அமைச்சர் சேர்த்துவைத்த பணம் இருக்கும் இடத்தை ரோபோ சங்கர் சொல்லவரும் இடம் கிட்டத்தட்ட 20 நிமிடக் காட்சி என்றாலும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருக்கிறது. அந்த இடத்தில் ரவி மரியாவும் முத்திரை பதித்திருக்கிறார்.
பொதுவாக நாயகிகள்தான் அதிக வேலை இல்லாமல் வந்து போவார்கள். இந்தப் படத்தில் நாயகனின் நிலையும் அதுதான். பெரும்பாலான காட்சிகளில் சூரி, ரோபோ ஷங்கருக்குத் துணை யாகவே விஷ்ணு விஷால் வருகிறார். நிக்கி கல்ரானிக்குக் காவல் அதிகாரி வேடம் கச்சிதம். ஒரு காட்சியில் சண்டைபோடவும் செய்கிறார். மற்றபடி இவரும் காமெடி மசாலாவில் கறிவேப் பிலைதான்.
கிளைமாக்ஸில் ராஜேந்திரன் ஆவிகள் சகிதம் தியானம், ஆட்டம் பாட்டம் என்று அவர் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். வில்லன்களாக வரும் ரவி மரியா, நரேன் குழுவினர் ஆவி ராஜேந்திரனிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள் கலகலப்பு.
ஆடல், பாடல் குழுவில் இருக்கும் புஷ்பாவை ஒரு பவுன் மோதிரத்துக்கு ஆசைப் பட்டு போலித் திருமணம் செய்துகொள்ளும் சூரி அவரை விட்டு விலகுவதற்காகப் படம் முழுக்க விவாகரத்து பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு அலையும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம். சூரி தொண்டை யைக் கிழித்துக் கொண்டு கத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
ஷக்தியின் ஒளிப்பதிவில் குறையில்லை. இசையில் சத்யா இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். காமெடிக்குள் ஒரு வலுவான கதை, சென்டிமென்ட், பாடல்களுக்கு முக்கியத்துவம் என்று கவனம் செலுத்தும் இயக்குநர் எழில். இந்த முறை அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை.
பாத்திரப் படைப்பில் கவனம் செலுத்தி, கொஞ்சம் லாஜிக்கும் நேர்த்தியும் கூடியிருந்தால் இந்த ‘வெள்ளக்காரன்’ இன்னும் கலகலப்பூட்டியிருப்பான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT