Published : 29 Mar 2017 10:28 AM
Last Updated : 29 Mar 2017 10:28 AM
தன்னுடைய உடல் வளர்ச்சிக்காகச் சட்டையை உரிக்கும் பாம்பைப் போல, மனிதன் தன் னுடைய வளர்ச்சிக்காக மாறிக்கொள்ளலாமா என்ற சமூக சிந்தனையுடன் கூடிய கதையில் மசாலா தூவித் தரப்பட்டுள்ள படம் ‘பாம்பு சட்டை’.
விதவையாக இருக்கும் அண்ணியுடன் (பானு) ஒரே வீட்டில் வசித்துவருகிறார் தட்சிணா (பாபி சிம்ஹா). அவருக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்று விரும்புகிறார். சரியான வேலை இல்லாமல் கிடைத்த வேலையைச் செய்யும் பாபி சிம்ஹா, பார்த்த மாத்திரத் தில் துரத்தித் துரத்தி வேணியைக் (கீர்த்தி சுரேஷ்) காதலிக்கிறார்.
அண்ணியுடன் ஒரே வீட்டில் இருப்பதால் பாபிக்குத் தன் பெண் ணைத் திருமணம் செய்துதர சார்லி மறுக்கிறார். அண்ணியைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து, அதற்காகத் தேவைப்படும் பணத்தைப் புரட்டும் பணியில் ஈடுபடுகிறார் பாபி. அப்போது கள்ள நோட்டுக் கும்பலிடம் சிக்கி, சேர்த்த பணத்தையும் இழக்கிறார். இழந்த பணத்தை பாபி மீட்டாரா, அண்ணிக்குத் திருமணம் செய்துவைத்தாரா, தன் காதலியைக் கரம் பிடித்தாரா என்பதே பாம்பு சட்டையின் கதை.
எளிய கதையைக் கள்ள நோட்டுப் பின்னணி யுடன் சொன்ன விதத்துக்காக அறிமுக இயக்குநர் ஆடம் தாசனைப் பாராட்டலாம். தினசரி வாழ்வில் துப்புரவுத் தொழிலில் உள்ளவர்கள் படும் துயரங் களைப் பதிவு செய்ததற்குப் பூங்கொத்து கொடுக் கலாம். கள்ள நோட்டு தயாரிப்பும், அதைப் புழக்கத்தில் விடுவதற் காக வறியவர்களைப் பயன்படுத்திக்கொள்வதும் நன்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால், இழுவையான காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன.
ஒன் றுக்கொன்று தொடர் பற்ற காட்சிகளும் முடிவில்லாமல் தொங்கும் காட்சிகளும் திரைக்கதையை பலவீனப்படுத்தி, சுவாரஸ் யத்தையும் குறைத்துவிடுகின்றன. சம்பந்தமே இல்லாமல் வரும் குத்துச் சண்டையும், அது தொடர்பான காட்சிகளும் திரைக்கதையோடு தொடர்ந்து பயணித்துக் குழப்பத்தில் ஆழ்த்து கின்றன.
தண்ணீர் கேன் போடும் இளைஞன் பாத்திரத் தில் அருமையாகப் பொருந்தியிருக்கிறார் பாபி சிம்ஹா. அண்ணியையும் தன்னையும் இணைத் துப் பேசும்போது கோபப்படுவது, காதலுக்காக மெனக்கெடுவது, தெரிந்தே செய்யும் தவறுக்காக மனம் புழுங்குவது என நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஆனால், உடல்மொழி ஒத்துழைக்கும் அளவுக்கு அவர் குரல் ஒத்துழைக்க வில்லை. எல்லாக் காட்சிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அவர் பேசுவது சலிப்பை உண்டாக்குகிறது.
ஏழைப் பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ் இயல்பான தோற்றத்தில் கவர்கிறார். துப்புரவுத் தொழிலாளியின் மகளாக நடிக்கும் இவர், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலை உள்வாங்கி நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். பானு, சார்லி, கே.ராஜன், குருசோமசுந்தரம், ஆர்.வி.உதயகுமார் ஆகி யோர் தத்தமது பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
அஜீஸின் பின்னணி இசை படத்துக்கு பலம் என்றாலும் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. ஒளிப்பதி வாளர் வெங்கடேஷ் சென் னையை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
வாழ்க்கை யதார்த்தத்தை உரித்துக் காட்ட முயலும் இந்த ‘பாம்பு சட்டை’, தெளிவற்ற திரைக்கதையால் கிழிந்து கிடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT