Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM

விஷாலைக் காதலிக்க முடியாது!: லட்சுமி மேனன்

முதல் மூன்று படங்கள் வெற்றி பெற்றதில் தமிழில் ஹாட்டான ஹாட்ரிக் நாயகி ஆகிவிட்டார் லட்சுமி மேனன். தமிழ் ரசிகர்களுக்குப் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்க்கிற உணர்வென்றால் பாக்ஸ் ஆபீஸுக்கோ நிஜ லட்சுமி கடாட்சம். இதனால் இவரது கையில் தற்போது நான்கு தமிழ்ப் படங்கள்.

விஷால் ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன்’, சித்தார்த் ஜோடியாக ‘ஜிகிர்தண்டா’, கௌதம் கார்த்திக் ஜோடியாக ‘சிப்பாய்’, விமல் ஜோடியாக ‘மஞ்சப் பை’, விஜய் சேதுபதி யுடன் விரைவில் ஆரம்பமாகும் ‘வசந்த குமாரன்’என்று தமிழில் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில் திலீப் ஜோடியாக ஒரு படம். இவற்றுக்கு நடுவே படிப்பையும் விடத் தயாரில்லை லட்சுமி.

‘ஜிகர்தண்டா’படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களைச் சந்தித்தார் லட்சுமி. படிப்பு, காதல், முத்தக் காட்சி, கல்யாணம், என எதைப் பற்றிக் கேட்டாலும் இந்தப் பள்ளி மாணவியிடமிருந்து பளிச்சென்று பதில் வருகிறது.

“11ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் தொடங்கி விட்டதால், இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியவில்லை” என்று வருத்தப்பட்டார். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் வர முடியுமா என்று தெரியாது. ஆனால் விஷாலுக்காக எப்படியாவது வர வேண்டும். விஷால் அத்தனை நல்ல மனிதர் என்று புகழ்ந்தவரிடம் சமயமென்று, உங்களுக்கும் விஷாலுக்கும் காதல் என்று கோலிவுட்டே கிடுகிடுக்கிறது ஆனால்

இந்த முறை இந்தச் செய்திகளுக்கு நீங்கள் மறுப்பேதும் சொல்லவில்லையே என்றால், “திரும்பத் திரும்ப அதைப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். விஷால் பழக இனிமையானவர். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நான் மீரா என்ற கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். மீரா என்ற பெயருக்குத் தகுந்த மாதிரி விஷாலை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் கேரக்டர். விஷாலைப் படத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் நிஜத்தில் நிச்சயமாக முடியாது. காரணம் விஷால் அம்மா, அப்பா கைகாட்டுகிற பெண்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்வாராம். இதை நீங்களே அவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று விரிவாக விளக்கம் தருகிறார்.

சொன்னபடியே ‘நான் சிகப்பு மனிதன்’ இசை வெளியீட்டுக்கு இவரால் வர முடியவில்லை. அதனால் என்ன? விஷால் லட்சுமியை மேடையில் புகழ்ந்து தள்ளினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x