Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM
திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான சொர்ண சகோரம் விருதை (தங்கச் சொம்போத்து விருது) இரானியப் படமான ‘பர்வீஸ்’ (Parviz) தட்டிச் சென்றது. இந்த படத்துக்கு விருதுடன் ரூ.15 லட்சம் பண முடிப்பும் வழங்கப்பட்டது. மஜித் பார்ஜிகர் இயக்கியுள்ள இந்தப் படம் மனித உணர்வுகளை நுட்பமாகச் சித்தரிக்கிறது. சிறந்த இயக்குநருக்கான ரஜத சகோர விருது (வெள்ளிச் செம்போத்து விருது) மேகே தக தாரா (Megha Dhaka Thara) என்னும் வங்க மொழிப் படத்தை இயக்கிய கமலேஷ் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. மிகவும் வரவேற்கப்பட்ட இந்தப் படம் இந்திய சினிமா முன்னோடி இயக்குநர் ரித் விக் கட்டர் குறித்த ஆவணப் படமாகும். இது சிறந்த ஆசியப் படத்திற்கான மற்றுமொரு விருதையும் பெற்றது.
1969ஆம் ஆண்டு மனநல மையத்தில் அனுமதிக்கப்பட்டி ருந்தபோது ரித் விக் கட்டாக் அனுப வித்த மிகை யதார்த்த நிகழ்வுகளை இந்தப் படத்தின் மூலம் கமலேஷ் முகர்ஜி சொல்லியுள்ளார். ரித் விக் கட்டாக்கின் முழுமையான ஆளுமை வெளிப்படும் இந்தப் படம் இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான படமாக ‘மேகே தக தாரா’ கொண்டாடப்பட்டது.
அர்ஜெண்டினா நாட்டு படமான எர்ராட்ட (Errata) படமும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றது. மலையாளப் படமான ‘101 சோத்தியங்கள்’ பார்வை யாளர்கள் விருதைப் பெற்றது. ‘கன்யகா டாக்கீஸ்’, ‘சி. ஆர். நம்பர் 89’ ஆகிய மலையாளப் படங்களும் விருதுகள் பெற்ற மற்ற படங்களாகும். திருவனந்த புரம் நிஷாகந்தி திறந்தவெளி மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட மான விழாவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருது கள் வழங்கினார். மத்திய அமைச்சர் சசி தரூர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக்கும், பழம் பெரும் மலையாள நடிகரும், இயக்குனருமான மதுவும் கெளரவிக்கப்பட்டனர். விழா கேரளப் பாரம்பர்ய இசையான கேளிகொட்டு நிகழ்வுடன் விழா நிறைவடைந்தது
கேளிகொட்டு
விழாவிற்கு வந்திருந்த பார்வை யாளர்கள் அனை வருக்கும் ஒரு சங்கு அளிக்கப்பட்டது. அது கேரளப் பாரம்பர்ய இசை வடிவ மான கேளிகொட்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படுவதாகும். விழா நிறைவில் அனைவரும் சங்கை இசைக்க கேளி கொட்டு மேடையில் நிகழ்த்தப்பட்டது. ‘வருகைக்கு நன்றி. மீண்டும் வர வேண்டும்’என்பதே கேளி கொட்டு இசைக்கப்பட்டதன் பொருள். மலையாள சினிமா இயக்குனர் டி. கே .ராஜீவ்குமார் இந்த நிகழ்ச்சியை இயக்கினார். கமல்ஹாசன் நடிப்பில் வெளி வந்த மலையாளப் படமான சாணக்யனின் இயக்குனர் இவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT