Last Updated : 24 Oct, 2014 01:04 PM

 

Published : 24 Oct 2014 01:04 PM
Last Updated : 24 Oct 2014 01:04 PM

டிவிட்டர் வலை

புயல்

ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களைப் புரட்டிப்போட்ட ‘ஹுத் ஹுத்' புயல் தெலுங்கு திரையுலகினரை ஒன்றிணைத்தது. பண உதவி மட்டுமன்றிப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் வசூலித்துக் கொடுத்தனர் தெலுங்குத் திரையுலகினர். ‘இந்தத் தீபாவளிப் பண்டிகையை இவர்களோடு கொண்டாடுங்கள்; விசாகப்பட்டினத்ததிற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது' என யூடியூபில் வலம் வரும் சிறிய வீடியோ பதிவு மூலம் வலியுறுத்தியுள்ளார் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ராஜீவ் மேனன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

‘கத்தி' முன்னோட்டம்

அக்டோபர் 19-ம் தேதி கத்தி முன்னோட்டம் வெளியாகும் என்று அறிவித்திருந்ததால், டிவிட்டரில் முன்னோட்டம் எப்படியிருக்கும் என்று விவாதங்கள் சூடுபிடித்தன.

பிறகு மாலை 6 மணிக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்னோட்டத்தைத் தனது டிவிட்டரில் பகிர்ந்தார். இது இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரால் ரீ-ட்வீட் செய்யப்பட்டது. தனுஷ், சிபிராஜ், தயாநிதி அழகிரி உள்ளிட்ட பலரும் ‘கத்தி' குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து விட்ட ‘கத்தி’ முன்னோட்டத்தில் விஜய் பேசும் வசனங்களும் பின்னணி இசையும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

19 ஆண்டுகள்

கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் 19-ல் வெளியான ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே' திரைப்படம், மும்பை மாராட்டா மந்திர் திரையரங்கில் கடந்த 19 ஆண்டுகளாக திரையிடப்பட்டுவருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் இந்திய அளவில் #19EvergreenYearsOfDDLJ என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. பலரும் அந்தப் படத்தைப் பற்றிய தங்கள அனுபவங்களை இந்த ஹேஷ்டேக்கில் டிவிட்டர்வாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x