Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
தமிழ் திரையுலகில் இருக்குற எல்லா தயாரிப்பாளர்கள், நாயகர்களுக்கும் நான் படத்துக்கு முன்னாடி பண்ணின டிரெய்லர் பத்தி தெரியும். சூர்யா, விஷால் இப்படி எல்லாருக்குமே டீல் அப்படினு ஒரு டிரெய்லரை படமா பண்ணிட்டு இருக்காங்கனு தெரியும். இப்போ படத்தோட தலைப்பு 'வா..!'. டீல் என்ற வார்த்தை கீழே சின்னதா இருக்கும். டீல் இங்கிலீஷ் வார்த்தைங்கிறதுனால அப்படி மாத்தியிருக்கேன்’ என்று தொடங்குகிறார் இயக்குநர் சிவஞானம். அவரிடம் பேசியதிலிருந்து...
இந்தப் படம் எதை டீல் பண்ணப் போகுது?
ஒருத்தரோட வாழ்க்கைல தினமும் காலைல இருந்து மாலை வரைக்கும் ஏதாவது ஒண்ணு கொடுத்தாதான் ஒண்ணு கிடைக்குது. காசு கொடுத்தாதான் பால், சக்கரை இப்படி எல்லாமே இருக்கு. இன்னைக்கு நீங்க எனக்கு உதவி பண்ணினா, நாளைக்கு நான் உங்களுக்கு உதவி பண்ணுவேன். இப்படிதான் வாழ்க்கை ஒடிட்டுருக்கு. இப்படி நம்மளோட வாழ்க்கைல எல்லாருமே ‘டீல்' போட்டுட்டுதான் இருக்கோம்.
இன்னைக்கு வாழ்க்கைல முக்கியமான விஷயம் பணம், இன்னொண்ணு பெண். நிறைய பணம் சம்பாதிக்கணும்னு, இல்லன்னா நல்லா அழகான பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணணும். இப்படித்தான் நிறைய பேரோட வாழ்க்கை இருக்கு. என் படத்துல ஹீரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணணும்னு முடிவு பண்றார். அப்போ அந்த பொண்ணு நான் உனக்கு வேணும்னா நீ இத செய் அப்படின்னு சொல்லுது. ஹீரோ எந்த இடத்துக்கு போகக் கூடாதுன்னு முடிவு பண்றாரோ அந்த இடத்துக்கு போகச் சொல்லுது. காதலி சொன்னதை ஹீரோ பண்ணினாரா இல்லயா, எப்படி பண்ணினார் அப்படிங்கிறதுதான் படத்தோட கதை.
அருண் விஜய், கார்த்திகா இந்தப் படத்துக்கு எப்படிப் பொருந்தியிருக்காங்க?
அருண் விஜய் ஒரு ஆக் ஷன் ஹீரோ. காதல், காமெடி, ஆக் ஷன் எல்லாமே நல்லா பண்ணுவார். ஆனா கதைதான் ஹீரோ. நல்ல கதை பண்ணிட்டோம். நல்ல ஒரு ஆக் ஷன் ஹீரோதானே தேவை. ‘தடையறத் தாக்க' படம் அருண் விஜய்க்கு நல்ல ப்ரேக் கொடுத்த படம். செமையா பண்ணியிருந்தார். இவர் பண்ணினா நல்லாயிருக்குமேன்னு பேசிட்டு இருந்தேன். அப்போ அவங்களே கூப்பிட்டாங்க. ஒரு டிரெய்லர் பண்ணியிருக்கீங்களாமே காட்டுங்க, கதை சொல்லுங்கனு சொன்னாங்க. சொன்னேன். உடனே ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லிட்டார்.
கார்த்திகா என்னோட எதிர்பார்ப்பை 100% பூர்த்தி பண்ணியிருக்காங்க. பொதுவா ஹீரோயின் வரும்போது பாட்டு வரும். ஆனால், இதுல ஹீரோயின் வரும்போது எல்லாம் ஃபைட்டுதான் வரும். தேவையில்லாத காதல் காட்சிகள் கிடையாது. ஆனால் ஆக் ஷன் காட்சிகள்ல ஒரு லவ் இருக்கும். வில்லன்கிட்ட நின்னு ஒரு பொண்ணு சேலஞ்ச் பண்ணனும்னா நல்லா ஹெட் வெயிட்டா இருக்கணும் இல்லயா. அதுக்கு கார்த்திகா க்ரெக்ட்டா இருந்தாங்க.
பிரபல நடன இயக்குநரை வில்லனா ஆக்கிட்டீங்களே?
கல்யாண் மாஸ்டரை நீங்க பழைய படங்கள்ல பார்த்தீங்கன்னா, இவன எல்லாம் என்ன பண்ணனும் தெரியுமா அப்படினு பயங்கர கோபம் வரும். இப்பவும் கல்யாணை நேர்ல பாத்தீங்கன்னா அவரோட லுக், நடை, மேனரிஸசம் எல்லாமே வில்லத்தனமாத்தான் இருக்கும். அவரை யாருமே சரியா யூஸ் பண்ணலன்னு நினைக்கிறேன். எனக்கு அப்படி ஒரு கேரக்டர்தான் வில்லனா தேவைப்பட்டது. கல்யாணை வேறொரு கேரக்டருக்குதான் பேசினோம். ஆனால், அவர் கிட்ட பேசினப்போ இவரை ஏன் வில்லனா யூஸ் பண்ணக் கூடாதுன்னு யோசிச்சி வில்லன் ரோல் கொடுத்தோம்.
உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன். ..?
இயக்குநர் பன்னீர் செல்வத்திடம் ‘18 வயசு' படத்தில் உதவி இயக்குநரா பணியாற்றி இருக்கேன். அதுக்குப் பிறகு நிறைய குறும்படங்கள், விளம்பரங்கள். ‘18 வயசு' படத்துக்கு பிறகு என்னோட வேலை செஞ்சவங்க எல்லாம் ஆளுக்கொரு குறும்படம் எடுக்க போயிட்டாங்க. நான் எங்கிட்ட இருந்த கதையை டிரெய்லரா ரெடி பண்ணிட்டு களத்துல இறங்கிட்டேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT