Published : 28 Sep 2018 11:37 AM
Last Updated : 28 Sep 2018 11:37 AM
அனைவரையும் ஈர்க்கும் தோற்றமும் தேவைக்கு அதிகமாகத் திறமையும் இருக்கலாம். ஆனால் அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் கைகொடுத்தால்தான் நட்சத்திரமாக ஜொலிக்கமுடியும். இது திரையுலகின் நம்பிக்கைகளில் ஒன்று. தற்போது விஜய் தேவரகொண்டா அதிர்ஷ்ட தேவதையின் விரலைப் பிடித்துக்கொண்டு வலம்வந்துகொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் ‘கீத கோவிந்தம்’ ஆந்திராவில் மட்டுமே ரூ.80 கோடியை வசூல் செய்திருக்கிறது. இந்தப் படத்தின் அமெரிக்க வசூல் மட்டுமே ரூ.25 கோடியைத் தொட்டுவிட்டது என்று ட்விட்டுகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புலிகள். நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, ரூ.100 கோடி வசூல் கிளப்புக்குள் நுழையும் முதல் இளம் நாயகன்.
துணை நடிகராக நடிக்கத் தொடங்கி, ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் நாயகன் ஆன இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’, சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி 51 கோடி ரூபாய் வசூல் ஆனது. அந்தப் படத்தை இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மறுஆக்கம் செய்து வருகிறார்கள். ‘வர்மா’ என்ற பெயரில் விக்ரமின் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தும் இயக்குநர் பாலா தமிழில் மறுஆக்கம் செய்துவிட்டார்.
இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா தமிழிலும் நடிக்க வந்துவிட்டார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நோட்டா’ என்ற அரசியல் கதையில் நடித்து முடித்துவிட்டார். தமிழ், தெலுங்கில் உருவாகிவயிருக்கும் இப்படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் ‘கீத கோவிந்தம்’ படத்தின் அதிரடி வெற்றியால்,
ன விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா ஜோடியை ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் மீண்டும் இணைத்து வைத்திருக்கிறது டோலிவுட். கதைத் தேர்வு, நடிப்பில் மட்டுமல்ல, திரை மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் லுங்கி போன்ற வீட்டில் அணியும் ஆடைகளில் வந்து அதிரடி செய்து ஊடகங்களைக் கவர்ந்துவிடுகிறார் காதல் கதைகளில் ஜெல்லியாக ஒட்டிக்கொள்ளும் விஜய் தேவரகொண்டா.
வாள் பிடிக்கும் சிரஞ்சீவி!
அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தின் பெரும்பாலான பகுதிகள் ஜார்ஜியா நாட்டில் படமாக்கப்பட்டன. தற்போது அதே லொக்கேஷன்களில் சிரஞ்சீவி நடித்துவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கர்னூல் ராஜ்ஜியத்தை 18-ம் நூற்றாண்டில் ஆண்ட அரசன் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப்படம் இது. தமிழகத்தின் வீரபாண்டிய கட்டப்பொம்மனைப்போல கிழக்கிந்திய கம்பெனிக்கு வரிகொடுக்க மறுத்த குறுநில மன்னர் இவர். இந்தப்ப் படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- ரசிகா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT