Published : 21 Sep 2018 11:36 AM
Last Updated : 21 Sep 2018 11:36 AM
‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப்பின் தனது தமிழ் சினிமா பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப். கடந்த ஆண்டு சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான ‘மாயவன்’ படத்தில் நடித்த இவர், இந்த ஆண்டு, அறிமுக இயக்குநர் யு. அன்பரசன் இயக்கும் ‘வால்டர்’ என்ற படத்தில் அர்ஜுன், விக்ரம் பிரபு ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.
மூன்றாவது பாய்ச்சல்!
நடிகர் விஜய் வசந்தை வைத்து ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ இரு த்ரில்லர் வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குநர் ராஜபாண்டி. ‘கள்ளபார்ட்’ என்ற தலைப்பில் தற்போது மூன்றாவது படத்தை இயக்குகிறார். தலைப்பும் அரவிந்தசாமி - ரெஜினா கெசன்ட்ரா என்ற நட்சத்திரக் கூட்டணியும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் கூட்டியிருக் கிறது.
கதையின் நாயகன்!
இன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தின் படு பிஸியான நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இவரையும் வடிவேலு, சந்தானம் பாதையில் கதையின் நாயகன் ஆக்கியிருக்கிறார்கள். சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘கூர்கா’ என்ற படத்தில்தான் இந்தக் கதை நாயக அவதாரம். யோகி பாபுவுடன் ஒரு நாயும் நடிக்கிறது.
பாலாவின் தேர்வு!
பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வர்மா’ படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அடுத்து பாலா இயக்க இருக்கும் படத்துக்கு உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாகத் தேர்வு செய்திருக்கிறார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சு வார்த்தைகள் சுமூக முடிவை எட்டியபிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
சூர்யாவின் தயாரிப்பு.
‘36 வயதினிலே’, ‘பசங்க-2’, ‘மகளிர் மட்டும்’, ‘கடைக்குட்டி சிஙகம்’ என தரமான படங்களைத் தயாரித்துவரும் நடிகர் சூர்யா, அடுத்து. ‘உறியடி-2’ படத்தை தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய விஜயகுமார், இதிலும் நாயகனாக நடித்து இயக்குகிறார். நாயகியாக கேரளாவைச் சேர்ந்த புதுமுகம் விஸ்மயா நடிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT