Last Updated : 07 Jun, 2019 10:16 AM

 

Published : 07 Jun 2019 10:16 AM
Last Updated : 07 Jun 2019 10:16 AM

மும்பை கேட்: அப்பாவுடன் நடித்த சோனம்!

சமீபத்தில் வெளியான ‘ஏக் லடுக்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் சோனம் கபூர் தன்பாலின உறவாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.‘சோனம் ஸ்வீட்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில், அவருடைய அப்பா அனில் கபூரே அவருக்குத் தந்தையாக நடித்திருந்தார். “இந்தப் படத்தால், யாராவது ஒரேயொரு தன்பாலின உறவாளரின் வாழ்க்கையில் மாற்றம் நடந்திருந்தால்கூட, அதுவே எனக்குத் திருப்திதான்” என்று சொல்லியிருக்கிறார் சோனம். 

sonamjpg

அடுத்ததாக அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் துல்கார் சல்மானுடன் இணைந்து ‘தி ஸோயா ஃபேக்டர்’ என்ற காதல் நகைச்சுவைப் படத்தில் நடித்துவருகிறார். அனுஜ் சவுஹான் இதே தலைப்பில் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார் சஞ்சய் கபூர். செப்டம்பர் 20 அன்று வெளியாகிறது.

காஜோலும் பிஸி!

தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திய மூத்த கதாநாயகி காஜோல், தற்போது பாலிவுட்டிலும் தனது இரண்டாவது ரவுண்டில் பிஸியாகியிருக்கிறார். மராத்திய இயக்குநர் ரேனுகா ஷஹாணே  இயக்கத்தில்  ‘திரிபங்கா’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றை ஏற்றிருக்கிறார். இதில்  ஷபானா ஆஸ்மி, மிதிலா பால்கர் ஆகியோர் மற்ற இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள்.

 மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்க்கையைக் காட்டும் கதை. இந்தப் படத் தில் நடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கும் காஜோலின் நடிப்பில் தயாராகிவரும் மற்றொரு படம் ‘தானாஜி – தி அன்சங் வாரியர்’. இந்தப் படம் 2020, ஜனவரி 10 அன்று வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகே ‘திரிபங்கா’ வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x