Published : 10 May 2019 10:58 AM
Last Updated : 10 May 2019 10:58 AM
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு ‘மான்ஸ்டர்’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்திருக்கிறார், பிரியா பவானிசங்கர். அடுத்தடுத்து ஜீவா, அதர்வா, இயக்குநர் சிம்புதேவன் படம் என அவரது இந்த ஆண்டு ரிலீஸ் படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இப்படிப் பிரகாசமாக ஒளிரும் தனது திரையுலகப் பயணம் பற்றி பிரியா பவானி சங்கர் பகிர்ந்துகொண்டவை..!
‘மான்ஸ்டர்’ படத்தில் எலிதான் முதன்மைக் கதாபாத்திரம். அப்படியிருக்கையில் உங்களுக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் என்ன வேலை?
ஒரு வீட்டுக்குள் நடக்குற கதைதான் இந்தப் படம். எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், நான், ஒரு எலி என நாங்க நால்வரும் ஒரு வீட்டுக்குள் என்ன செய்றோம் என்பதுதான் களம். அதிலும் அந்த எலி எஸ்.ஜே.சூர்யா வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவருது என்பது சுவாரசியமாக இருக்கும்.
ஒரு வீட்டுக்குள் நால்வர் எனும்போது சுவாரசியத்துக்காக இயக்குநர் நிறைய மெனெக்கெட்டிருக்க வேண்டுமே?
நெல்சன் இயக்கிய ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் பார்த்தாலே அது புரியும். திருமணம் என்ற ஒரு கருவை வைத்துக்கொண்டு ரொம்பவே மெனெக்கெட்டிருப்பார்.
சாதாரணமாக நடித்துக்காட்டுவோம்னு இறங்கினால் அது அவருக்குப் பிடிக்காது. யதார்த்த உணர்வை வெளிப்படுத்துவதையே எதிர்பார்க்கிறார். அந்த மாதிரிதான் இந்தப் படமும் இருக்கும்.
எலி நடித்ததன் பின்னணியைச் சொல்ல முடியுமா?
படப்பிடிப்பு தொடங்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. எலிக்கு மட்டுமே தனியாக 60 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் வரும் எலி ட்ராக் காட்சிகளில் 80 சதவீதம் ஒரிஜினல் எலியை வைத்தே எடுத்தார்கள்.
‘உங்களைவிட எலியே கம்மியான டேக்கில்தான் நடித்தது!’ன்னு இயக்குநர் என்னைக் கலாய்ப்பார். மனிதனுக்கு ஒரு எலி என்ன தொந்தரவு எல்லாம் கொடுக்கும் என்பதைப் படப்பிடிப்பில் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் குறைந்த காட்சிகளில் வந்திருந்தாலும் ரசிகர்களை ஈர்த்தது எப்படி?
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துல குணசிங்கம் மாமா எனக்கு இல்லைன்னு தெரிந்ததும், அந்த உணர்வை வெளிப்படுத்துற அந்த இடத்தைப் பலரும் குறிப்பிட்டுச் சொல்றாங்க.
அதுல ஸ்கோர் பண்ணினா போதும்!’னு சொன்னார். அப்படித்தான் உள்ளே வந்தேன். இன்னைக்கு அந்தப் படம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கு!
எந்த அடிப்படையில் படத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
‘நீங்க ஏன் 100 படங்கள்ல நடிக்கலை?’ன்னு யாரும் இங்கே கேட்கப்போறதில்லை. ‘குருதி ஆட்டம்’ தொடங்கி அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கு. ஒரு படத்துல ஹீரோயின் கதாபாத்திரத்தைத் தூக்கிவிட்டால் அந்தப் படத்துல என்ன இருக்குன்னு பார்ப்பேன்.
எந்தவித இடையூறும் இல்லாமல் நகர்ந்தால் வேண்டாம்னு இருந்துடுவேன். ஒரு சீன்லயாவது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தால்தானே நமக்குச் சரியா இருக்கும்னு தோணுது. அப்படித்தான் என் கதைகளைத் தேர்வு செய்கிறேன்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரப் பலரும் முயல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது தாமதமாகி வருகிறதே?
அதுதான் எனக்கும் சரியாகப் புரியல. என்னோட அனுபவத்தில் சொல்லணும்னா முதலில் அதிர்ஷ்டம். ஆனால், அது மட்டுமே போதாது. சினிமாவுக்கு வரும்போது நம்மை ஏற்றுக்கொள்ளும் கிரியேட்டர், அவர் மனத்தில் உள்ள கதாபாத்திரத்துக்காக நினைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் நம்மை ரசிகர்களுக்கு எதனால் பிடிக்கிறது என்ற காரணமும் முக்கியம். அப்படி ரசிகர்கள் விரும்பும் பாணியில் இரண்டு, மூன்று படங்கள் நடித்துவிட்டு ட்ராக் மாறினாலும் இங்கே சிக்கல்தான்.
நான் திடீரென கிளாமர் ரோலுக்கு மாறினால் சரியாக இருக்குமா? வாய்ப்பே இல்லை. நானும் அதைச் செய்ய மாட்டேன். அதுதான் இங்கே முக்கியம். செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது சீரியல் பற்றி நினைத்ததே இல்லை.
‘கல்யாணம் முதல் காதல்வரை’ சீரியல் நகர்ந்தப்போ சினிமாவுக்கு வருவேன்னு யோசனையே இல்லை. ஆனாலும் அமைந்தது. அடுத்த 10 ஆண்டுகள் தள்ளி எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதுக்குத் தொந்தரவு இல்லாத விஷயங்களைச் சரியாகச் செய்யணும்னு தொடர்கிறேன். அவ்வளவுதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT