Last Updated : 12 Sep, 2014 01:11 PM

 

Published : 12 Sep 2014 01:11 PM
Last Updated : 12 Sep 2014 01:11 PM

மியாவைத் தேடிவரும் கல்லூரி!: மியா பேட்டி

மலையாளப் படவுலகில் பிரபலமான கதாநாயகி. அதனால் என்ன? நன்கு தமிழ் பேசத் தெரிந்த தன் தோழிகளின் வீடு தேடிச் சென்று அவர்களோடு உரையாடி தமிழ் பேசக் கற்றுவருகிறார் மியா. ‘‘மலையாளத்தில் 10 படங்களில் நடிச்சிட்டேன். ஆனா பள்ளி மாணவி கேரக்டர் மலையாளத்தில் அமையல.

என் அதிர்ஷ்டம் ‘அமர காவியம்’ படத்துல அது கிடைச்சது. ஹீரோ சத்யாவுக்கு மலையாளம் தாய்மொழி. ஷூட்டிங்கில எனக்குச் சந்தேகம் வந்தப்போல்லாம் அவர்தான் எனக்கு ஹெல்ப் பண்ணினார். ஸ்வீட் பர்சன்” என்று மென்மையாகப் பேச ஆரம்பித்தார் மியா.

அது என்ன மியா?

அரபியில் ‘மியா’ என்றால் 100 என்று எண்களை எழுதிக் காட்டுகிறார்கள். பலரிடம் கேட்டுவிட்டேன், மலையாளத்தில் அதுக்கு என்ன பொருள் என்றே தெரியவில்லை. தமிழில மீனிங் இருந்தா கண்டுபிடிச்சு சொல்லுங்க.

பள்ளி மாணவியா நடிச்சது ஓகே. நிஜத்துல படிக்கிறீங்களா இல்லை நிறுத்திட்டீங்களா?

என்னோட சொந்த ஊர் கோட்டயம் பக்கத்தில பாலா. அங்குதான் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். இந்த மாதம் 6-ம் தேதி வரைக்கும் எக்ஸாம் இருந்தது. தமிழ்நாட்ல அமர காவியம் ரிலீஸ். அப்போ நான் பிஸியா கேரளாவுல எக்ஸாம் எழுதிட்டு இருந்தேன். எக்ஸாம் ரிசல்ட் லேட்டா வரும். படத்தோட ரிசல்டுக்காக வெயிட் பண்றேன்.

பரபரப்பான ஹீரோயினா இருக்கும்போது படிப்புல கவனம் செலுத்த முடியுதா?

நான் நடிச்ச படங்களைப் பார்த்தே என்னோட நடிப்புக்கு காலேஜ்ல முழு சுதந்திரம் கொடுத்துட்டாங்க. எனக்கும் சேர்த்து என் பிரண்ட்ஸ்தான் வகுப்பைக் கவனிப்பாங்க. நான் காலேஜ் போக முடியாதப்போ நடத்துற பாடங்கள் எல்லாத்தையும் என்னோட ஃபிரெண்ட்ஸ் எனக்கு டிக்டேட் பண்ணிடுவாங்க. காலேஜ் எனக்காக பண்ணியிருக்க ஸ்பெஷல் ஏற்பாடு இது. இதுவரைக்கும் நோ ப்ராப்ளம்.

மலையாளத்தில் பிஸியாக இருக்கும்போது தமிழ் சினிமா மேல அப்படியென்ன காதல்?

பீரியட் படங்கள்னாலே ரொம்பப் பிடிக்கும். அதிலயும் ஸ்கூல் டேஸ்ல நடக்கிற காதல் கதைன்னா மிஸ் பண்ணத் தோணுமா?! அமர காவியம் 89 – 90 கால கட்டம். நான் அப்போ பிறக்கவே இல்ல. அந்த நாட்களுக்கு டிராவல் பண்ணப்போறோம்னு நினைச்சப்ப ஆசையாக இருந்தது. இயக்குநர் ஜீவா சங்கர் கதைய இ-மெயிலில் அனுப்பிப் படிங்கன்னார். காஸ்ட்யூம்ஸ், ஊட்டி லொக்கேஷன், போட்டோகிராஃபி எல்லாமே ஸ்கிரிப்ட்ல டீடெயிலா இருந்தது. படிச்சதுமே இந்தப் படத்துல நடிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.

மலையாளத்தில் எடுத்ததுமே பெரிய ஹீரோக்கள் கூட நடித்திருக்கீங்களே?

இவ்ளோ சின்ன வயசுல லீடிங் ஆக்டர்ஸ், சீனியர் டைரக்டர்ஸ் கூட வேலை பார்க்கிற வாய்ப்பு அமைஞ்சது என் அதிர்ஷ்டம்தான். மோகன்லால், பகத் பாசில், குஞ்சாக்கோ போபன் இவங்க கூட நடிச்சதை மறக்க முடியாது. இன்னும் நிறைய டெக்னீஷியன்களோடு ஒர்க் பண்ணனும். அப்போதான் நடிப்பு பத்தி, சினிமா பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியும். இதெல்லாம் போதாது.

சினிமாவில் உங்களோட இலக்கு?

அப்படியெல்லாம் எந்த பிளானும் இல்லை. சினிமால இருக்கிறவரைக்கும் நம்ம இடத்தை யாரும் ரீபிளேஸ் பண்ண முடியாதுன்னு நினைக்க வைக்கனும். நடிப்புக்கு பாடி லாங்வேஜ் ரொம்ப முக்கியம்தான், ஆனா போற போக்கில ஒரேயொரு கண்ணசைவுல நச்சுன்னு டைரக்டர் சொல்றதை வெளிப்படுத்த டிரைபண்றேன்.

என்னோட கண்கள்ல மூலமா நான் நல்ல நடிப்பை வெளிப்படுத்த முடியும்ன்னு எல்லா டைரக்டர்ஸுமே சொல்றாங்க. அதிக நம்பர்ஸ் என்னோட விரும்பம் கிடையாது. வித்தியாசமான கேரக்டர்ஸ்தான் என்னோட டார்கெட். டான்ஸ், மியூசிக் ரெண்டுமே ரொம்பப் பிடிக்கும்.

நேரம் போறது தெரியாம பரதம் பிராக்டீஸ் பண்ணிட்டு இருப்பேன். நடிகை ஷோபனா மேடமோட கண்டெம்ரரி ஸ்டைல் ஆஃப் டான்ஸுக்கு நான் அடிமை. அவங்களோட கோரியோகிராஃப் ரொம்பவே கியூட்டா, புதுசா இருக்கும். எதிர்காலத்தில் அதுபோல நடனத்தை விரும்புகிறவர்களுக்கு இந்த மியா நினைவு வரணும். நான் டான்ஸ்லயும் அச்சீவ் பண்ணனும்.

ரொம்ப பிடிச்ச விஷயங்கள்?

வீடு, அப்பா, அம்மா, அக்கா. அப்பறம் ஆலப்புழா, ஊட்டி… அவ்ளோதான்.

படங்கள் உதவி: ஷெனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x