Published : 14 Dec 2018 09:39 AM
Last Updated : 14 Dec 2018 09:39 AM

16-வது சென்னை சர்வதேசப் படவிழாவில் இன்று: வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் இளமை

இரான் படம் இல்லாமல் படவிழா ஏது? 36 வயதான இளம் இரானிய இயக்குநர் பூயா பத்கூபேத் இயக்கியிருக்கும் முதல் படம் ‘ட்ரெஸேஜ்’. அண்ணா திரையரங்கில் இரவு 7 மணிக்குத் திரையிடப்படும் இந்தப் படம் இன்றைய இளைய தலைமுறை இரானிய இளைஞர்களின் மனநிலையை, உணர்வுகளின் குவியலாகப் படம் பிடித்துக்காட்டி உங்கள் மனதைத் திருடுவது உறுதி. இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான கோல்ஸா த்ரில்லுக்காகத் தன் நண்பர்கள் சிலருடன் இணைந்து விளையாட்டுத்தனமாகத் திருடுவதை வழக்கமாகக் கொண்டவள். விளையாட்டு ஒரு கட்டத்தில் வினையாகும்போது நண்பர்கள் ஓடி ஒளிந்துகொள்ள, ஒரு பெண்ணாக கோல்ஸா வாழ்க்கையை எப்படிக் கற்றுக்கொண்டாள் என்ற நாடகமாக்கம் உலகப் பொதுமையுடன் பிரதிபலிப்பது படத்தை உலக சினிமாவாக ஆக்கிவிடுகிறது. பெர்லின் திரைப்பட விழாவில் விமர்சகர்கள் விருதை வென்றிருக்கும் தகுதி ஒன்றே இந்தப் படத்தைக் காணப் போதுமானது.

இந்தப் படங்களோடு கேசினோவில் மாலை 4.45 மணிக்குத் திரையிடப்படும்  ‘டச் மீ நாட்’, முன்னதாக தேவி பாலா திரையரங்கில் காலை 10.45 மணிக்குத் திரையிடப்படும் ‘படோஸீ’ இதே அரங்கில் மாலை 5.30 மணிக்குத் திரையிடப்படும் ‘த ரிப்போர்ட் ஆன் சாரா அண்ட் சலீம்’ ஆகிய படங்களையும் தவறவிடாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x