Published : 13 Dec 2024 06:15 AM
Last Updated : 13 Dec 2024 06:15 AM
சென்னை சர்வதேசப் பட விழாவின் 22வது பதிப்பில் புதிதாக கவனம் ஈர்த்துள்ளது உலகப்படப் போட்டிப் பிரிவு. அதற்கு, ஒளிப்பதிவாளர், இயக்குநர் சந்தோஷ் சிவன் தலைமையை உள்ளடக்கிய நீதிபதிகள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகப் படப் போட்டிப் பிரிவுக்குத் தேர்வாகியுள்ள 12 படங்களில் 5 இந்திய மொழிப் படங்கள்.
அவற்றில், ஹரிகுமரன் இயக்கியுள்ள ‘கிணறு’ என்கிற தமிழ்ப் படம் இடம்பெற்றுள்ளது. சிறார் திரைப்படமான இது, இப்படவிழாவில் பிரீமியராகத் திரையிடப்படுகிறது. ‘ஹாய் நானா’, ‘கமிட்டி குர்ரோள்ளு’ ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களும் ‘ஓட்டா’ என்கிற மலையாளப் படமும், ‘தீவார் கி அஸ் பார்’ என்கிற இந்திப் படமும் மற்ற 4 இந்தியப் படங்கள்.
உலக நாடுகளில், ஆஸ்திரியாவி லிருந்து மட்டும் 3 படங்கள் தேர்வாகியிருக்கின்றன. மூன்றுமே ஜெர்மானிய மொழிப் படங்கள். ‘ஹேப்பி’, ‘80 ப்ளஸ்’, ‘ஸ்லீப்பிங் வித் எ டைகர்’ ஆகியவையே அப்படங்கள். அதேபோல் பெர்சிய மொழியில் உருவான ‘ரேவயாட் நடமான் இ சிமா’, ‘இன் த ஆம்ஸ் ஆஃப் ட்ரீ’ என இரண்டு ஈரானியப் படங்கள் தேர்வு பெற்றுள்ளன. இவற்றுடன் துருக்கியிலிருந்து ‘சீசன் ஆஃப் லவ்’, வெனிசுலாவிலிருந்து ‘தர்காரி டி சீவோ’ ஆகிய படங்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT