Published : 22 Nov 2024 06:20 AM
Last Updated : 22 Nov 2024 06:20 AM
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வயதில் மூத்த நடிகர்களின் தான்தோன்றித்தனத்தால் நாடகக் கலை தனது தனித்தன்மையை இழக்கத் தொடங்கியது. இந்த வீழ்ச்சியைச் சரிசெய்ய, சிறார் நடிகர்களைப் பயிற்றுவித்து நாடகங்களை நடத்த, பாலர் நாடக சபை முறையைத் தோற்றுவித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
அவரது முயற்சியைத் தொடர்ந்து பல பாலர் சபைகள் பெருகி, ‘பாய்ஸ் நாடகக் கம்பெனி’ ஆகின. அவற்றில் நடித்து, பின்னாளில் திரையுலகில் புகழ்பெற்று நட்சத்திரங்களாக விளங்கிய ஐம்பதுக்கும் அதிகமான கலைஞர்களைக் குறித்த தகவல்களைச் சுருக்கமாகத் திரட்டித் தந்திருக்கிறார் நூலாசிரியர். அடிப்படையில் அவரும் நாடகக் கலைஞராக இயங்கி வந்திருப்பவர் என்பதால், தகவல்களைத் தேடித் தொகுத்த விதத்தில் தகவல் களஞ்சியமாக உருப்பெற்றுள்ளது இந்நூல்.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
டி.வி.ராதாகிருஷ்ணன்
226 பக்கங்கள்
விலை ரூபாய் - 240/-
வெளியீடு நாதன் பதிப்பகம்சென்னை - 600093
தொடர்புக்கு: 98840 60274
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT