Published : 17 Nov 2024 07:57 AM
Last Updated : 17 Nov 2024 07:57 AM
திரை வானில் உச்சத்திலிருக்கும் நேரத்தில் அரசியல் ஆடுகளத்துக்கு வந்திருக்கிறார் விஜய். இச்சமயத்தில் அவரது 40 ஆண்டு காலத் திரைப் பயணத்தில் அவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளையும் அடுத்த கட்டப் பரிமாணங்களையும் கொடுத்த திரைப்படங்களின் இயக்குநர்கள் விஜயுடனான தங்கள் நினைவுகளை இப்பகுதியில் பிரியமுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
தன்னுடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் எழுத்து - இயக்கத்தில், விஜய் தொடர்ந்து நடித்தபடி வளர்ந்து வந்த காலம் அது. அதிலிருந்து அவரை வெளியே இழுத்துப் போட்டு அவருக்குக் கண்ணியம் மிகுந்த முதல் திருப்புமுனையை ’பூவே உனக்காக’ படத்தின் மூலம் கொடுத்தார் இயக்குநர் விக்ரமன். மதம் மாறி நடந்த ஒரு காதல் திருமணத்தால் இரண்டு உயிர் நண்பர்களின் குடும்பங்கள் பிரிந்துவிடுகின்றன. அடுத்த தலைமுறையில் அதேபோன்றதொரு திருமணத்தால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைத்து வைக்கும் ஒரு துடிப்பான இளைஞனின் கதைதான் படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT