Published : 08 Nov 2024 06:42 AM
Last Updated : 08 Nov 2024 06:42 AM

ப்ரீமியம்
பால்கே போட்ட பாதையில்... | கண் விழித்த சினிமா 04

‘கீசக வத’க் காட்சி: ராஜா ரவிவர்மா 1890இல் வரைந்த ஓவியம்

மும்பை மாநகரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது நாசிக் நகரம். இங்குள்ள பல சுற்றுலாத் தலங்களில் பயணிகளைப் பெரிதும் கவரும் ஒன்று இயற்கை எழில் சூழ்ந்த பாண்டவர் குகை. இதன் அடிவாரத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்திய சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் ‘தாதா சாகேப் பால்கே நினைவகம்’.

1870இல் நாசிக்கில் பிறந்த பால்கேதான், இந்தியாவின் முதல் முழுநீள சலனப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’வைப் படமாக்கி 1913இல் வெளியிட்டவர். அதன் பின்னர் 1932 வரை 95 திரைப்படங்களையும் 26 ஆவணப்படங்களையும் எடுத்த இவரது பங்களிப்பே இந்திய சினிமாவின் வளர்ச்சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x