Published : 18 Oct 2024 06:30 AM
Last Updated : 18 Oct 2024 06:30 AM

ப்ரீமியம்
கோவையே முதல் கோடம்பாக்கம்! | கண் விழித்த சினிமா 03

அரண்மைன போன்ற வீடும் அரண்மனை போன்ற திரையரங்கும் அருகருகே கட்டியவர் சாமிக்கண்ணு வின்செண்ட்

முதல் தமிழ் சினிமா பிறக்கும் முன்னரே திரையரங்குகள் முந்திரிக் கொட்டைகள் போல் முளைத்து விட்டன. அதற்குக் காரணம், பிரிட்டிஷ் ஆட்சியில் ஐரோப்பியச் சலனப் படங்கள் தாராளமாக இறக்குமதி செய்யப்பட்டதே.

முதலில் ஒலியின்றியும் 1909ஆம் ஆண்டு தொடங்கி ‘குரோனோ மெகாஃபோன்’ என்கிற சாதனத்தின் உதவியால் ஒலியுடனும் இவை திரையிடப்பட்டன. சென்னை நகரில் மட்டுமே திரையிடல் கண்டுவந்த சலனப் படங்களை, சென்னைக்கு வெளியே கொண்டு சென்று சாமானிய மக்களிடம் சினிமா என்கிற சாதனத்துக்குப் பெரும் அறிமுகத்தைப் பெற்றுக்கொடுத்தார் சாமிக்கண்ணு வின்செண்ட். அதுமட்டு மல்ல; ‘பதே’ நிறுவனத்தின் சேவல் சின்னம் பொறித்த திரையிடல் கருவியை (PathÉ KOK projector) விநியோகம் செய்வதற்கான முகவராக உரிமம் பெற்று, நிரந்தரத் திரையரங்குகள் அடுத்தடுத்து உருவாகக் காரணமாக அமைந்துபோனார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x