Published : 11 Oct 2024 06:20 AM
Last Updated : 11 Oct 2024 06:20 AM

சென்னையில் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ விருதுகள் 2024

OTTplay தலைமைச் செயல் அதிகாரி அவினாஷ் முதலியாருடன் ராஜ்குமார் ராவ், குல்ஷன் குரோவர்

புத்தாயிரத்துக்குப் பிறகான தென்னிந்திய சினிமா, கடந்த இரு பத்தாண்டுகளில் பெரும் உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா மட்டும்தான் என்று நம்பி வந்துள்ள உலக அரங்கின் கண்களை, தமிழ், மலையாள, கன்னட, தெலுங்குப் படங்கள் தம்மை நோக்கித் திரும்பியிருக்கின்றன.

இங்கே ரூ.500 முதல் 1200 கோடி வசூல் செய்யும் படங்களையும் ஆஸ்கர் விருதுகளை அள்ளி வரும் படங்களையும் நீங்கள் காண முடியும். அவ்வளவு ஏன், கான் உள்ளிட்ட உலகப் படவிழாக்களிலும் தென்னிந்திய சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது. வணிக ரீதியான வெற்றியிலும் படைப்புரீதியான தரத்திலும் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளையடிப்பதிலும் தென்னிந்திய சினிமா தொடர்ந்து பேசுபொருளாகிவருகிறது.

இப்படி எல்லாத் தளங்களிலும் ஜொலிக்கும் திரைப்படங்களின் பின்னால் இருப்பவர்கள் அதை உருவாக்கும் கலைஞர்களும் அவற்றின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் நட்சத்திரங்களும்தான். இந்த இரண்டு தரப்பினருமே அடுத்த தலைமுறையினருக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் ‘ட்ரெண்ட் செட்டர்’கள். அப்படிப்பட்ட அசலான திறமைகளை அடையாளம் கண்டு கொண்டாட வேண்டியதும் அங்கீகரிப்பதும், தென்னிந்திய சினிமாவின் அடுத்த கட்ட நகர்வுக்கும் வளர்ச்சிக்கும் மிக அவசியமான தூண்டுகோலாக அமையும். அதை ஆழமாக உணர்ந்து உருவாக்கப்பட்டிருப்பதுதான் ‘சேஞ்ச் மேக்கர்ஸ் விருதுகள் 2024’.

விருது பெற்ற பிரதீப் ரங்கநாதனுடன் பாபில் கான்

பெயரே உறுதியான நோக்கத்தைக் கூறும் ‘சேஞ்ச் மேக்கர்ஸ் அவார்ட்ஸ்’ விருதுகளை முன்னெடுத்து நிறுவியவர்கள், இந்தியாவின் முன்னணி ஓடிடி உள்ளடக்கத் திரட்டியும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் பார்வையாளர்களுக்கு உள்ளடக்கப் பரிந்துரை களை வழங்கும் இணையதளமுமான ‘ஓடிடி பிளே’ (https://www.ottplay.com/ - AI-based recommendation engine platform and India's Super OTT App) நிறுவனம். தற்கால இந்திய சினிமாவில் தாக்கத்தையும் போக்குகளையும் உருவாக்கிய கலைஞர்களை, நட்சத்திரங் களை அடையாளம் கண்டு அங்கீகரித்த இவ்விருது விழாவின் முதல் பதிப்பு, கடந்த ஆண்டு மும்பையில் நடந்தது.

தற்போது, OTTplay தனது ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ விருதுகள் விழாவின் இரண்டாவது பதிப்பை வரும் 26ஆம் தேதி (அக்டோபர் 26, 2024) சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஐந்து நட்சத்திர விடுதியில் நடத்துகிறது. வளர்ச்சிக்கான இதழியலில் களமாடிவரும் இந்து தமிழ் திசை நாளிதழுடன் இணைந்து, நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியம் மிக்கதும் இந்தியாவின் முன்னோடி ஊடக நிறுவனமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் வழங்கும் எதிர்பார்க்கப்பட்ட இவ்விழா, முற்றிலும் தனித்துவமும் தரமும் மிக்கது.

ரிஷப் ஷெட்டியிடம் விருதுபெற்ற ஜோஜு ஜார்ஜ்

2024 ‘சேஞ்ச் மேக்கர்ஸ் விருதுகள்’ செழித்து வளர்ந்து வரும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள சினிமாவின் தனிப்பெரும் கலைஞர்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தவிருக்கிறது.

அந்த வகையில் புதுமையான கதைசொல்லல், சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் உருவாக்கம், அதன்வழி வணிக ரீதியான வெற்றியை அடைதல் ஆகியவற்றில் துடிப்பும் தொலைநோக்கும் கொண்டு தம் திறமையைக் காட்டிய படைப்பாளிகளையும் நட்சத்திரங்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் தரமான அங்கீகார மேடையாக இது ஒளிரும்.

இவ்விருது விழாவில், நான்கு தென்னிந்திய மொழிகளின் திரையுலகில் சாதித்து வரும் வெற்றியாளர்கள், நட்சத்திரங் கள், படைப்பாளிகள், முன்னோடிகள் ஆகியோர் 30க்கும் மேற்பட்ட பிரிவுகளில் கௌரவிக்கப்படுவார்கள். குறிப்பாக, ‘ஈர்க்கும் நட்சத்திரம்’ (Disruptive Star), ‘பன்முகக் கலைஞன்’ (Versatile Performer), ‘தாக்கம் தரும் நடிப்பாளுமை’ (Inspiring Actor) ஆகிய விருதுகள் ஆண் - பெண் ஆகிய இருபால் கலைஞர்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன. இவர்கள் பாரம்பரியத் திரையரங்கத் திரையிடல் - ஓடிடி திரை ஆகிய இரண்டு தளங்களிலும் தங்களுடைய நடிப்புத் திறன், படைப்பாளுமை, நீண்ட காலப் பங்களிப்பு ஆகியவற்றால் சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக இருப்பார்கள்.

பிரியாமணியிடம் விருதுபெற்ற பேசில் ஜோசப்

OTTplay நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி அவினாஷ் முதலியாரிடம் ‘சேஞ்ச் மேக்கர்ஸ் விருதுகள் 2024’ பற்றிக் கேட்டபோது: “அசலான திறமைகளை அங்கீகரிப்பது மட்டுமல்ல; அசத்தலாகக் கதை சொல்லல் என்கிற ஆற்றலின் வழியாகத் திரையுலகில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வந்த கற்பனைத் திறனைக் கௌரவம் செய்வதே முதன்மை நோக்கம். இந்த ஆண்டு, தென்னிந்திய சினிமாவில், தங்களுடைய கற்பனைத் திறன் வழியாக, மாநிலம் என்கிற எல்லையையும் நாடுகள் என்கிற எல்லையையும் கடந்து உலகளவில் பார்வையாளர்களை ஈர்த்த திறமையாளர்களை நாங்கள் கௌரவிக்கிறோம். தென்னிந்தியத் திரைவெளியின் கதைசொல்லிகளுடைய அபாரமான பங்களிப்பையும் அவர்கள் எழுதிய கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய கலைஞர்களையும் இந்த ஆண்டு கொண்டாடு வதன் மூலம், ‘சேஞ்ச் மேக்கர்ஸ் விருது’களின் தனித்த பாரம்பரியத்தை உருவாக்கித் தொடர விரும்புவதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

தனிப்பட்ட திறமைகளை அங்கீகரிக்கும் அதேநேரம், ‘மாற்றத்துக்கான குரல்’ மற்றும் ‘மாற்றத்துக்கான படைப்பு’ (Voice of Change and Cinema for Change) ஆகிய இரண்டு கூடுதல் பிரிவுகளின் கீழ் பொருள் பொதிந்த வகையில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இவை திரையில் விலங்குகளின் நலனை முன்னிறுத்திய, சமூக மாற்றத்துக் கான பாதைக்கு வழிகோலிய படைப்பு களுக்கான விருதுகளாக அமைந்துள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே, OTTplay சேஞ்ச் மேக்கர்ஸ் 2024 விருதுகளின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியன சமரசத்துக்கு இடமற்றவை. ஏனென்றால் OTTplay மற்றும் இந்து தமிழ் திசை ஆசிரியர் குழுவால் விருது பெறவிருக்கும் ஒவ்வொரு வெற்றியாளரும் எதன் பொருட்டு அங்கீகாரத்துக்குத் தகுதி பெற்றார் என்பது விரிவான, கூர்மையான கலந்துரையாடல், மதிப்பெண்கள் அளித்தலின் வழியாகச் சீரிய சிந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

அனில் அகர்வால் ஃபவுண்டேஷன் (Anil Agarwal Foundation) இந்நிகழ்வினை ஸ்பான்சர் செய்ய, ஃபீவர் எஃப்எம் (Fever FM) பண்பலை வானொலிப் பங்காளியாகக் கைகோக்க, ஜீ5 (ZEE5) அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் பங்காளியாக இருந்து இந்நிகழ்வை ஒளிபரப்ப இருப்ப தால் உலகம் முழுவதும் எண்ணற்றப் பார்வையாளர்களை ‘சேஞ்ச் மேக்கர்ஸ் விருதுகள் 2024’ விழா சென்றடையும்.

OTTplay ஒடிடி தளங்களையும் அவற்றின் உள்ளடக்கங்களையும் ஒரே குடையின் கீழ் திரட்டி தரும் ஒரு முன் னோடி பொழுதுபோக்கு இணையம். செயற்கை நுண்ணறிவு அடிப்படை யிலான பரிந்துரைகளை வழங்கும் இந்த இணைய தளம், OTTplay Premlum திட்டத்தின் வழியாக ஒவ்வொரு பார்வையாளரின் தனிப்பட்ட விருப்பங்களின் 40 முன்னனி ஓடிடி தளங்களின் சேவையிலிருந்து விரும்பிய உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுத்துக் காணும் வாய்ப்பை இப்போது வழங்கி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x