Published : 04 May 2018 10:01 AM
Last Updated : 04 May 2018 10:01 AM
‘ஸ்
டார் வார்ஸ்’ வரிசை திரைப்படங்கள் மும்மூன்று தொகுப்புகளாக வெளியாவது வழக்கம். மூன்றாவது முத்தொகுப்பின் முதல் திரைப்படமான ‘ஸ்டார் வார்ஸ்:த ஃபோர்ஸ் அவேகன்ஸ்’ 2015-ம் ஆண்டும் இரண்டாவது திரைப்படமான ‘த லாஸ்ட் ஜேடி’ கடந்த ஆண்டும் வெளியானது. பெயரிடப்படாத கடைசிப் படம் அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியாக உள்ளது.
இந்த முத்தொகுப்புகளில் அடங்காது உபரியாக வெளியாகும் ஸ்டார் வார்ஸ் படங்களும் உண்டு. 2016-ல் வெளியான ‘ரோக் ஒன்: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி’ இந்த ரகத்தில் சேரும். அப்போதே இரண்டாவது உபரியாக அறிவிக்கப்பட்ட ‘சோலோ: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி’ திரைப்படம் மே 25 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது.
சோலோ படத்தின் கதை, ‘ரோக் ஒன்’ மற்றும் ஸ்டார் வார்ஸ் வரிசையின் முதல் திரைப்படமும் அத்தியாய கணக்கில் நான்காவதுமான ‘எ நியூ ஹோப்’ ஆகியவற்றின் கதைக்களனுக்கு முந்தைய காலத்தில் நடப்பதாகத் தொடங்குகிறது. லூக்கின் நண்பனும், லேயாவின் காதல் கணவனுமான ஹான் சோலோவை மையப்படுத்தி அவனது சாகசத்தை மெச்சுகிறது ‘சோலோ எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி’. சோலோ தன் சகாவான சூவ்பக்கா (Chewbacca), லாண்டோ கல்ரிசியன் (Lando calrissian) ஆகியோரைச் சந்திப்பதும், இவர்கள் பங்கேற்கும் வழக்கமான விண்வெளி தீபாவளி வித்தைகளுமாகப் புதிய படத்தின் கதை செல்கிறது.
ஸ்டார் வார்ஸ் படங்களில் ஹான் சோலாவாக வழக்கமாகத் தோன்றும் ஹாரிசன் ஃபோர்ட், தனது தனித்துவ நடிப்பால் கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்த்திருப்பார். இம்முறை இளம்வயது சோலாவாக வருகிறார் ஆல்டன் எரென்ரெய்க். இவர் ஹாரிசனிடம் தனது கதாபாத்திரத்துக்காகத் தனிப் பயிற்சி பெற்றாராம். முன்னதாகப் படத்தை இயக்கிவந்த இரட்டை இயக்குநர்களை, திரைக்கதையில் சமரசம் செய்ததாகக் குற்றம்சாட்டி தயாரிப்பு நிறுவனமான லுகாஸ் ஃபிலிம் வெளியேற்றியதும், பின்னர் பொறுப்பேற்ற ஹாவர்ட் கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தை மீண்டும் எடுத்ததும் தனிக்கதை.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT