Published : 29 Apr 2018 09:42 AM
Last Updated : 29 Apr 2018 09:42 AM
‘எ
ன்னமோ நடக்குது’ படத்துலதான் நர்ஸ் கதாபாத்திரம் ஏற்று நடிச்சீங்க? இப்போ அடுத்தடுத்து வெளிவர இருக்கும் ‘ஐங்கரன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களிலும் நர்ஸ்தானாமே? என்று மஹிமா நம்பியாரிடம்கேள்வியோடு பேச ஆரம்பித்தால், ‘‘ஆமாம்.. அப்படித்தான் அமையுதுன்னு நானே ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு எப்போதுமே திரில்லர் கதைகள் மீது தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில, கதாபாத்திரம் முழுக்க வித்தியாசமா இருந்ததால ஒப்புக்கொண்டேன். ‘ஐங்கரன்’ படத்தில் துறுதுறு நர்ஸ். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் மெச்சூரிடியை வெளிப்படுத்துற நர்ஸ். இரண்டுக்கும் செம வித்தியாசம் இருக்கும்’’ என்று பேட்டிக்குத் தயாராகிறார் மஹிமா நம்பியார்.
சினிமா படப்பிடிப்பு, படத்தின் ரிலீஸ் நேரங்கள்.. இதைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளில் மஹிமாவை பார்க்கவே முடிவதில்லையே?
எனக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் காசர்கோடு. கர்நாடகா பார்டர். எனக்கு ஊர்ப் பாசம் அதிகம். ஷூட்டிங் இல்லைன்னா உடனே ஊருக்கு போய்டுவேன். சின்ன வயசுல இருந்தே சுத்தி சுத்தி வர்றதால, அங்கு யாரும் இப்போ கூட என்னை நடிகையாக பார்க்க மாட்டாங்க. ஏன், கண்டுக்கவே மாட்டாங்க. வெகு இயல்பா இருக்கிற அந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலதான், ஷூட்டிங் இல்லைன்னா சிட்டா பறந்துடறேன்.
தமிழில் அறிமுகமான ‘சாட்டை’ படத்துக்கு பிறகு, ‘குற்றம் 23’ உங்களுக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. அடுத்தடுத்து ‘புரியாத புதிர்’, ‘கொடிவீரன்’ போன்ற படங்கள் சரியாக போகாதது வருத்தமாக இருந்திருக்குமே?
அப்படி இல்லை. ‘குற்றம் 23’ படத்துக்கு முன்பே நான் ஒப்புக்கொண்டு நடித்த படம் ‘புரியாத புதிர்’. அது ரிலீஸாக தாமதமாகிவிட்டது. காயத்ரிதான் கதாநாயகி; படத்தில் எனக்கு சின்ன ரோல் மட்டுமே என்று தெரிந்தேதான் ஏற்றேன்.
அதேபோல, அண்ணன் - தங்கை பாசம் என்ற கதை பிடித்ததால்தான் ‘கொடிவீரன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் எப்போதும் கமர்ஷியல் வேல்யூ பார்த்து நடிப்பதில்லை. கதாபாத்திரம் பிடித்தால் போதும். நடிக்க கிளம்பிவிடுவேன்.
விக்ரம் பிரபுவின் ‘அசுரகுரு’ நாயகி நீங்கதானாமே?
ஆமாம். திரைத்துறை வேலைநிறுத்தத்துக்கு முன்பே நான் ஒப்பந்தமான படம் அது. விக்ரம் பிரபுவின் பகுதிகள் இடம்பெறும் 5 நாட்கள் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. என் பகுதிக்கான ஷூட்டிங் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதுவும் ஒரு திரில்லர் களம்தான்.
நாயகிகளுக்கு வலை விரித்து ‘வெப் சீரீஸில்’ நடிக்க வைக்கும் கிரியேட்டர்கள் உங்களையும் நடிக்க வைக்க முயற்சித்தார்களாமே?
வெப் சீரீஸ் டிரெண்ட்டாகி வருகிறது. இங்கிலீஷ்ல இருந்து இந்தி சினிமாவுக்கு வந்து, இப்போ தெற்கையும் அது விட்டு வைக்கலை. எனக்கும் அழைப்பு வந்தது. இப்போதைக்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று அதை தவிர்த்திருக்கேன். வருங்காலத் தில் நல்ல கதைகள் வரும்போது பார்க்கலாம்.
முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் எண்ணம் மஹிமாவுக்கு இல்லையா?
ஏன் இல்லாமல்? அந்த வாய்ப்புகள் அமைந்தால் வேண்டாம்னு யார் சொல்லுவா? இயக்குநர்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT