Published : 17 Nov 2023 06:18 AM
Last Updated : 17 Nov 2023 06:18 AM
உலக சினிமாக்கள் குறித்துத் தொடர்ந்து பலரும் எழுதி வருகிறார்கள். அதற்குச் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் பெரும் சாளரமாக விளங்கி வருகின்றன. என்றாலும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஈரானிய, தென்கொரிய, பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானியப் படங்களைப் பற்றியே திரும்பத் திரும்ப எழுதப்படுகிறது. ஆனால் பிரதீப் செல்லத்துரை, 248 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் வழியாக, இதுவரையிலும் யாரும் அவ்வளவாக அறிந்திராத தேசங்களின் திரைப்படங்களைக் குறித்து அழுத்தமான அறிமுகத்தை நமக்குக் கொடுக்கிறார்.
கூடவே அந்நாடு களின் அரசியல் வரலாற்றையும் அங்குள்ள முக்கியமான சமூகச் சிக்கல்களையும் திரைப்பட அறிமுகத்தினூடாக அறியத் தந்திருக்கிறார். இது அப்படங்களை காணும் போது இன்னும் ஆழமாக உள்வாங்க உதவி செய்யும். சினிமா வெறுமனே ஒரு பொழுதுபோக்குக் காட்சி ஊடகம் மட்டுமே அல்ல; ஒரு தேசத்தின் கலாச் சாரத்தையும் அரசியல் வெளியையும் புரிந்துகொள்ள உதவும் கலை வெளி. அவ்வகையில் புவர்த்தோ ரீகா, மால்டா, அங்கோலா, எத்தியோப்பியா மாதிரியான அபூர்வமாகத் திரைப்படங்கள் எடுக்கக்கூடிய நாடுகளின் திரைப்படங்களைக்கூட இப்புத்தகத்துக்காக தேடிப்பிடித்து அறிமுகப்படுத்தியிருப்பதன் பின்னாலுள்ள உழைப்பு சுவையான மொழியில் வெளிப்பட்டிருக்கிறது.
100 நாடுகள்
100 சினிமா
பிரதீப்
செல்லத்துரை
மோக்லி பதிப்பகம்,
குரோம்பேட்டை,
சென்னை - 44
தொடர்புக்கு: 9176891732
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT