Last Updated : 01 Oct, 2023 10:36 AM

 

Published : 01 Oct 2023 10:36 AM
Last Updated : 01 Oct 2023 10:36 AM

ப்ரீமியம்
சர்வதேச மொழிபெயர்ப்பு நாள்: செப்டம்பர் 30 | A அ - சங்கடங்கள் சமரசங்கள் சறுக்கல்கள்

இலக்கிய மொழிபெயர்ப்பு குறித்து சில ஆயத்த கருத்துகள் பொதுவாசகர்களிடையே உண்டு. இரண்டு மொழிகள், இரண்டு நாடுகள், இரண்டு கலாச்சார – பண்பாடுகளுக்கிடையிலான பாலம் என்பதைத் தாண்டியும் பல்வேறு கூறுகள் மொழிபெயர்ப்பில் பொதிந்திருக்கின்றன.

சுயமாக எதையும் தனது பிரதியில் சேர்த்துவிடலாகாது என்கிற ஆதாரமான விதியையும் தாண்டி, மொழிபெயர்ப்பாளன் என்கிற தனித்துவ ஜீவராசிக்கு வேறு சில கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. ஒருவன் எவ்வளவு திறமைவாய்ந்த எழுத்தாளனாக, இரு மொழிகளிலும் தேர்ச்சியுடையவனாக இருந்தாலும் எல்லா நூல்களையும் மற்றொரு மொழியில் பரிபூரணமாக மொழிபெயர்த்துவிட முடியாது என்கிற ஞானம் அவனுக்கு முதன்மையாக இருந்தாக வேண்டும். மொழிபெயர்க்கவியலாத்தன்மை (Untranslatability) ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் உண்டு. ஒரு மண்ணின் சுயத்தை, சாயலை அதற்கு அந்நியமானதொரு மொழியில் ஓரளவுக்கேனும் பெயர்த்தெடுப்பதற்கு சில விசேஷமான உத்திகள் தேவைப்படுகின்றன. ஆப்ரிக்க இலக்கியத்தின் பிதாமகனான சினுவா ஆச்செபேவின் Things Fall Apart ஆங்கில நாவலாக இருந்தாலும், சம்பிரதாய பிரித்தானிய ஆங்கிலநடையில் எழுதப்படாமல் நைஜீரிய சொலவடைகளுக்கும், கலாச்சாரத் தனித்துவத்துக்கும் ஏற்றாற்போல நாவலின் குரலை ‘இக்போ’த்தனமாக மாற்றி எழுதிருப்பது உதாரணம். (’இக்போ’ என்பது நைஜீரியாவின் பயஃப்ரா பகுதியிலுள்ள பெரும்பான்மை இனக்குழுவின் மொழி). இதைப் போன்ற சிக்கல்களை வெற்றிகரமாக இல்லாவிட்டாலும் ஓரளவு சமாளித்துக்கொண்டு தனது பிரதியில் மூலப்படைப்பாளியைக் கொண்டுவர மொழி பெயர்ப்பாளன் எதிர்கொள்ளும் சங்கடங்களும், சறுக்கல்களும், சமரசங்களும் எண்ணற்றவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x