Published : 09 May 2022 03:13 PM
Last Updated : 09 May 2022 03:13 PM
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக்காலப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. ‘வானியல் முகாம்’ (Astronomy Camp), சூரியக் கடிகார முகாம் (Sun dail camp), முப்பரிமாண அச்சுமுறை முகாம் (3D Printing Camp), செயற்கை நுண்ணறிவு முகாம் (Artificial Intelligence), கோடைக்கால அறிவியல் முகாம் (Summer science camp) ஆகிய தலைப்புகளின் கீழ் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
‘வானியல் முகாம்’ (Astronomy Camp), இம்மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. 7, 8, 9 வகுப்பு மாணவர்களுக்கான இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.05.2022. விண்ணப்பிக்க வேண்டிய இடம், சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம். www.tnstc.gov.in என்னும் இணையதள முகவரியில் விண்ணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 50 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுபவர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். பயிற்சிக் கட்டணம்: ரூ. 1000.
சூரியக் கடிகாரம் முகாம் (Sun dail camp), இம்மாதம் 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. 6, 7, 8, 9 வகுப்பு மாணவர்களுக்கான இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.05.2022. விண்ணப்பிக்க வேண்டிய இடம், சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம். www.tnstc.gov.in என்னும் இணையதள முகவரியில் விண்ணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 50 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுபவர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். தொடர்புக்கு: 044 – 24410025. பயிற்சிக் கட்டணம்: ரூ. 750.
முப்பரிமாண அச்சுமுறை முகாம் (3D Printing Camp), இம்மாதம் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. 7, 8, 9 வகுப்பு மாணவர்களுக்கான இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 28.05.2022. விண்ணப்பிக்க வேண்டிய இடம், சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம். www.tnstc.gov.in என்னும் இணையதள முகவரியில் விண்ணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 50 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுபவர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். தொடர்புக்கு: 044 – 24410025. பயிற்சிக் கட்டணம்: ரூ. 750.
செயற்கை நுண்ணறிவு முகாம் (Artificial Intelligence), இம்மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. 8, 9, 10 வகுப்பு மாணவர்களுக்கான இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 23.05.2022. விண்ணப்பிக்க வேண்டிய இடம், சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம். www.tnstc.gov.in என்னும் இணையதள முகவரியில் விண்ணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 50 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுபவர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். தொடர்புக்கு: 044 – 24410025. பயிற்சிக் கட்டணம்: ரூ. 1500.
கோடைக்கால அறிவியல் முகாம் (Summer science camp), இம்மாதம் 19, 20,21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. 6, 7, 8, 9 வகுப்பு மாணவர்களுக்கான இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.05.2022. விண்ணப்பிக்க வேண்டிய இடம், சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம். www.tnstc.gov.in என்னும் இணையதள முகவரியில் விண்ணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 50 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுபவர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். தொடர்புக்கு: 044 – 24410025. பயிற்சிக் கட்டணம்: ரூ. 1500.
இந்தப் பயிற்சிகள் அனைத்தும் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT